Pages

Wednesday, October 23, 2024

OPS - UPS- NPS- CPS COMPARISON

*OPS (GPF) --* 

#  ஊதிய பிடித்தம்  இல்லை. 

 # பணி கொடை உண்டு. 

 #  பென்ஷன் 50% (30 years). 

# Family pension உண்டு.

*UPS...... *

#  ஊதிய பிடித்தம் 10%(ஊழியர்) 18.5% (அரசு) 

 # பணி கொடை உண்டு. 

 #  பென்ஷன் 50% (25 years). 

# Family Pension உண்டு.

*NPS... *

# ஊதிய பிடித்தம் 10% (ஊழியர்) 14% (அரசு).. 

#  பணி கொடை இல்லை.

#  பென்ஷன் உண்டு. ஆனால் நிலையான தொகை இல்லை. கூடலாம். குறையலாம்.. 

#  Family pension இல்லை.

*CPS..*

# ஊதிய பிடித்தம் 10% (ஊழியர்) 10% (அரசு). 

# பணி கொடை இல்லை. 

# பென்ஷன் இல்லை. 

# Family pension இல்லை. 

# பிடித்த பணத்திற்கு குறைந்த வட்டியுடன் திருப்பி கிடைக்கும்.

 CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம்

(தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு இணைந்துள்ள கூட்டமைப்பு)


24.10.24 உண்ணாவிரதம் ஏன் பங்கேற்ற வேண்டும் ?

 மத்திய அரசு மற்றும் தமிழகம் தவிர்த்த இதர மாநில அரசுகள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் படி ஒய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்துடன்

( PFRDA) 2004 முதல் ஒப்பந்தம் போட்டுள்ளது

தமிழக அரசு 21 வருடங்களாக ஒய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்யவில்லை.

.________________________


புதிய ஓய்வூதிய திட்டம் படி PFRDA வுடன் ஒப்பந்தம் செய்துள்ள மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு சேமிப்பு தொகைக்கு ஏற்ப மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் 2016 ம் ஆண்டு வரை  பிடித்த பணம் கூட வழங்கவில்லை.


2016 ல் தமிழகத்தில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தால் 2016 பிப்ரவரி மாதம் முதல் one time settlement வழங்கப்பட்டு வருகிறது.


ஆனால் 21 ஆண்டுகளாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை

__________________________

PFRDA வில் கையெழுத்திட்ட மத்திய மாநில அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த அரசு ஊழியர் குடும்பங்களுக்கு 20 ஆண்டுகளாக பணி கொடை வழங்கப்பட்டு வருகிறது

தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும்  ஊழியர்களுக்கு  21 ஆண்டுகளாக பணி கொடை வழங்கப்படவில்லை

___________________________

PFRDA வில் கையெழுத்திட்ட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மரணமடைந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் குடும்ப  ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும்  அரசு ஊழியர்கள் மரனமடைந்தால் குடும்பத்தினருக்கு 21 ஆண்டுகளாக குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை

___________________________

PFRDA வில் கையெழுத்திட்ட மத்திய அரசு மற்றும் மாநிலத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு அவர்கள் செலுத்திய பங்கீடு தொகையில் இருந்து 25% கடன் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு அவர்கள் செலுத்திய பணத்தில் இருந்து இன்று வரை முன்பணம் வழங்கப்படவில்லை.

___________________________

1.1 2004 க்கு முன்பு தினக்கூலி தொகுப்பூதியம்

மதிப்பூதியத்தில் பணிபுரிந்து 1.1.2004 க்கு பின்பு கால முறை ஊதியத்தில் ஈர்க்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதிய திட்டம் பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -ஆனால் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.


PFRDA வில் கையெழுத்திட்ட மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அரசு  ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

.

தமிழகத்தில் 1.4.2003 க்கு முன்னர் தினக்கூலி தொகுப்பூதியம் மதிப்பூதியத்தில் பணிபுரிந்து 1.4.2003 க்கு பின்னர் கால முறை ஊதியததிற்கு ஈர்க்கப்பட்டவர்கள் ( காவலர்கள் செவிலியர்கள் நூலகர்கள் ) உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் .

பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு அமுல்படுத்த மறுத்து வருகிறது

மேலும் காவலர்கள் வழக்கில் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

இன்று வரை தமிழகத்தில் அமுல்படுத்த தமிழக அரசு மறுத்து வருகிறது.

__________________________




No comments:

Post a Comment