Pages

Wednesday, October 30, 2024

விபத்தில்லா தீபாவளி!!!

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு

அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியர்

 கனிவான கவனத்திற்கு ,


1. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.


2. மோட்டார் வாகனம், கார், பேருந்து போன்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களின் அருகிலும், பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் இடம், பெட்ரோல் பங்க் அருகிலும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. 


3. பட்டாசுகளைக் கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு வேடிக்கைப் பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். 


4. பட்டாசு வெடிப்பதில் கவனக் குறைவு கூடாது. மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் மிகுந்த கவனத்துடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 


5. பட்டாசு மீது தகர டப்பாக்களைப் போட்டு மூடி, வேடிக்கைப் பார்த்தால், அது வெடிக்கும்போது டப்பா தூக்கி எறியப்பட்டு, விபத்துகள் நேரிடக்கூடும்.


6. குடிசைப் பகுதியிலும், மாடிக் கட்டிடங்கள் அருகிலும், ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது. 


7. எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது. 


8. ஈரமுள்ள பட்டாசுகளை அடுப்பில் வைத்து உலர்த்தக் கூடாது. 


9. பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகள் தனியாகப் பட்டாசுகளை கொளுத்த அனுமதிக்கக் கூடாது. 


10. பறந்து, சீறிப்பாய்ந்து சென்று வெடிக்கும் வகையைச் சேர்ந்த பட்டாசு வகைகளை குடிசைகள், ஓலைக் கூரைகள் உள்ள இடங்களுக்கு அருகில் கொளுத்தக் கூடாது. 


என்றும் மாணவர் நலனில்

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு



No comments:

Post a Comment