Pages

Monday, October 7, 2024

ABRSM போபால் செயற்குழு கூட்டம்- முழு விவரம்!!!

 ABRSM  அமைப்பின் அகில இந்திய செயற்குழு கூட்டம் அக்டோபர் மாதம் 4,5 மற்றும் 6 ஆம் தேதி மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் நடைபெற்றது. 

அந்நிகழ்வில் பாரத நாட்டின் 20மாநிலங்களில் இருந்து பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி சார்ந்த மாநில பொறுப்பாளர்களும் தேசிய பொறுப்பாளர்களும் என 120 பெயர் பங்கேற்றனர். அந்நிகழ்வில் தமிழ்நாட்டின் சார்பாக மாநிலத் துணைத் தலைவர் திரு பா. விஜய் அவர்கள் கலந்து கொண்டார். அந்நிகழ்வை பற்றிய தகவல்களை கீழே காண்போம்.    *முதல்*நாள்* *அமர்வு* (4/10/2024)..அனைத்து மாநில பொறுப்பாளர்களும் தங்கள் மாநிலத்தில் நடைபெற்ற அமைப்பு சார்ந்த செயல்பாடுகளின் அனுபவங்களை பகிர்ந்தார்கள். ஆசிரியர்களுக்கான பிரச்சனையை எவ்வாறு தீர்த்தார்கள் மற்றும் அமைப்பு சார்ந்த சேவை பணிகள் மற்றும் மாணவர் நலன் சார்ந்த விஷயங்கள் பகிரப்பட்டன. மேலும் முதல் நாளில் அமைப்பு வளர்ந்து வந்த விதத்தைப் பற்றியும் தற்சமயம் நமது அமைப்பு பரவலாக பாரதத்திருநாடு முழுமையாக சென்றடைந்ததைப் பற்றியும் நம் அமைப்பின் வெற்றியைப் பற்றியும்  நமது அகில இந்திய பொதுச் செயலாளர் திரு. சிவானந்த  சிந்தன்கரே அவர்கள் பேசினார். பின்பு இரண்டாவது அமர்வில் அகில இந்திய அமைப்புச் செயலாளர் திரு. மகேந்திர கபூர் அவர்கள் பேசும் பொழுது ஆசிரியர்களே சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குபவர்கள் நாளைய சமுதாயம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பவர்களும் அவர்களே. ஆசிரியர்களை ஒருங்கிணைக்கக்கூடிய பணியை நாம் நமது அமைப்பின் மூலம் நெடிய  தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.    இரண்டாம் நாள் (5/10/2024)இரண்டாம் நாள் அமர்வில் முதல் அமர்வில் மகளிரின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதம் செய்யப்பட்டது.பெருவாரியான ஆசிரியர் சமுதாயம் மகளிராக உள்ளதால் அவர்களுக்கு விசேஷமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய கலந்த ஆலோசனை செய்யப்பட்டது.பெண் ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை, மகளிர் மாநாடு, மற்றும் மகளிர் உடல் நலன் சார்ந்த மருத்துவ முகாம் போன்றவற்றை ஆசிரியர்களுக்காக நடத்துவது ஆகியவற்றைப் பற்றி விவாதம் செய்யப்பட்டது. விவாதத்தில் பஞ்சாப், குஜராத், உத்திரபிரதேசம்,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா தெலுங்கானா, ஆந்திரா, கேரளா,ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர்  மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் பெண் ஆசிரியருக்காக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இரண்டாம் நாள் இரண்டாவது அமர்வில். நாம் செய்ய வேண்டிய சேவை பணிகளைப் பற்றி விவரிக்கப்பட்டது. 1.எனது பள்ளி எனது புனித தலம் பற்றி விவாதம் நடைபெற்றது (ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளி முன்னேற்றத்திற்காக எவ்வாறெல்லாம் பணி செய்ய முடியும் என்பது விவாதிக்கப்பட்டது. தனியார் மற்றும் முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் பள்ளியின் கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் மாணவர் நலன் சார்ந்து ஆசிரியர்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி விவாதம் நடைபெற்றது. தமிழகத்தின் சார்பாக சுமார் 5 கோடி ரூபாய்க்கு நலப்பணிகள் பல பள்ளிகளில் நடைபெற்றது கருத்தரங்கில் கூறப்பட்டது அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. 2.சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான விவாதம் இரண்டாவதாக நடைபெற்றது. ஒரு ஆசிரியர் ஒரு மரம் ஒரு மாணவர் ஒரு மரம் என்பதாக நமது அமைப்பின் சார்பாக சுற்றுச்சூழல் மாசுபாடை குறைக்க மரம் நடுதல், மழைநீர் சேகரித்தல், மக்கும் குப்பை மக்கா குப்பை ஆக இவற்றை பிரித்தெடுத்தல் போன்ற பல்வேறு செயல்களை நமது பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய விஷயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது. நமது அமைப்பின் சார்பாக பசுமையான பாரதத்தை உருவாக்க உறுதி எடுக்கப்பட்டது .3.சேவைப் பணிகள் பற்றிய விவாதம் மூன்றாவதாக நடைபெற்றது. நமது பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை நம்மால் வழிகாட்ட இயலும் ஏனென்றால் நம்முடைய அமைப்பானது தொடக்க கல்வியிலிருந்து உயர்கல்வி வரை உள்ளது. மேலும் ஏழை எளிய மக்கள் வாழும் பகுதியில் இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் போற்றித் தேர்வுக்கான வகுப்புகள் நடத்துவது அவசியம் என்று கூறப்பட்டது. (தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக நடைபெற்று வரும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு மற்றும் சென்னையில் நடைபெற்று வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் மையம் ஆகியவை அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. 3.தொடர்பின் அவசியம் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் நமது சங்கம் வளர ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் ,பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை அவசியம் நாம் தொடர்பில் வைத்திருக்க வேண்டும். அது ஒன்றே மாற்றத்தை விளைவிக்கும். அம்மா மாற்றம் ஆனது சங்க வளர்ச்சிக்கு மிக அதிக அளவில் உதவி புரியும். 5ஆம் தேதி மாலையிலே நமது அகில இந்திய பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில்  ஜெய்ப்பூர் அரசு கல்லூரியை சார்ந்த பேராசிரியர் திரு நாராயண லால் குப்தா அவர்கள் அகில இந்திய தலைவராக பொறுப்பேற்றார். புது தில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திருமதி கீதா பட் அவர்கள் அகில இந்திய பொது செயலாளராக பொறுப்பேற்றார். அகில இந்திய தலைவர் திரு நாராயணலால் குப்தா அவர்களின் சிறப்புரை. நாம் வகிக்கக்கூடியது பதவியல்ல இது பொறுப்பு இது இறைவனால் நமக்கு அளிக்கப்பட்டது என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் பணி செய்யும் கல்லூரி மற்றும் கல்வி நிறுவனம் மேன்மை அடைய நாம் பாடுபட வேண்டும். அனைத்து ஆசிரியர்களையும் மாற்ற அமைப்பில் இருந்தாலும் அவர்களை அன்பாக அரவணைத்து செல்ல வேண்டும். 2047 ஆம் வருடம் நமது நாட்டின் நூற்றாண்டு விழா சமயம் அதை (vikshith bharat) என்று சொல்வார்கள். அதை நோக்கி தேசம் செல்கின்ற பயணத்தில் ஆசிரியர்கள் ஆகிய நாம் மிகப்பெரிய பங்கை வகிக்க உள்ளோம். நம்மால் தான் இந்த பாரத தேசம் உன்னத நிலையை அடையும். இவ்வாறு இரண்டாவது நாள் நிகழ்வு நிறைவு பெற்றது ....

மூன்றாவது நாள் நிகழ்வு. மூன்றாவது நாள்( 6/10/2024)  மத்திய பிரதேஷ் தலைநகர் போபாலில் உள்ள ரவீந்தரா பவன் என்ற இடத்தில் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்ட மூன்று கல்வியாளர்களுக்கு சிக்ஷா பூசன் விருது வழங்கப்பட்டது மேலும் அவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் காசோலை வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு. மத்திய பிரதேச முதலமைச்சர் மாண்புமிகு. மோகன் யாதவ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வித்துறைக்காக பணியாற்றிய மூன்று பேராசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய பிரதேச கல்வித்துறை அமைச்சர் ராவ் உதய் பிரதாப் சிங், அகில இந்திய அமைப்பு செயலாளர் திரு., மகேந்திர கபூர் ,அகில இந்திய தலைவர் திரு நாராயண லால் குப்தா, அகில இந்திய பொதுச் செயலாளர் திருமதி கீதா பட் ஆகியோர் மற்றும் அகில இந்திய மாநில பொறுப்பாளர்களும் மத்திய பிரதேச மாநிலத்தின் ABRSM உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர் .


மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற அகில இந்திய செயற்குழுவில் மாநிலத் துணைத் தலைவர் திரு.பா விஜய் அவர்கள் ஆசிரியர் ஆசிரியர்களின் பிரச்சினைகளைப் பற்றி விவரித்து கூறினார்.அவை 

1.முன்பு வழங்கியதைப் போல பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்

2.பதவி உயர்வு பெற ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு அவசியம் என்ற முறையில் விலக்கு அளிக்க வேண்டும்.

3.முன்பு வழங்கிய ஆசிரியர்களுக்கான இரண்டு ஊக்க ஊதிய முறையினை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

 4.ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணியைத் தவிர வேறு எந்த பணியும் அளிக்கக்கூடாது . 

5.அனைத்து நலப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவது

 6.ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்துவது. 


ஆகிய கோரிக்கைகள் மாநிலத் துணைத் தலைவரால் எடுத்துரைக்கப்பட்டது.








No comments:

Post a Comment