Pages

Wednesday, August 14, 2024

கலைத்திருவிழா 2024 - Important Dates!!!


பள்ளி அளவிலான போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கலைத்திருவிழா 2024-25 போட்டிகளின் மையக்கருத்து

 சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு 


இந்த மையக் கருத்தின் அடிப்படையிலேயே போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

 போட்டி நடைபெறும் நாட்கள்

 22.08.2024 முதல் 30.08.2024 வரை

அரசுப் பள்ளிகளில் 1 - 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் மற்றும்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 - 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.

கலைத் திருவிழா போட்டிகள் *ஐந்து பிரிவுகளில்* நடைபெறும்.


பிரிவு 1️⃣

1 மற்றும் 2ஆம் வகுப்பு


பிரிவு 2️⃣

3 முதல் 5 ஆம் வகுப்பு வரை 


பிரிவு 3️⃣ 

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 


பிரிவு 4️⃣ 

9 மற்றும் 10 ஆம் வகுப்பு 


பிரிவு 5️⃣ 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு


 *சில வழிகாட்டுதல்கள்* :


🔵 அனைத்து பள்ளிகளும் கலைத்திருவிழா போட்டிகளில் பெரும்பான்மையான மாணவர்களை பங்கு பெறச் செய்தல் வேண்டும்.


🔵 போட்டிகளை நடத்துவதற்கு பள்ளி அளவில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கலை ஆர்வலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அமைப்பு குழுவினை உருவாக்க வேண்டும்.


🔵 பள்ளி அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், SMC உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் முழு ஈடுபட்டையும் ஒத்துழைப்பையும் பெறுதல் மிகவும் முக்கியம்.


🔵 பள்ளி அளவிலான போட்டிகளில் நடுவர்களாக பணிபுரிய வல்லுநர்களை கண்டறிந்து அமைப்பு குழுவினரிடம் கலந்து ஆலோசித்து நடுவர் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அதற்கான முன் அனுமதியை வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பெற வேண்டும். இந்த பட்டியலில் இருந்து தான் நடுவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.


🔵 பள்ளி அளவிலான அனைத்து போட்டிகளும் "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு" என்ற மையக் கருத்தின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.


🔵 ஒருவர் எவையேனும் மூன்று தனிப் போட்டிகள் மற்றும் இரண்டு குழுப்போட்டிகளில் மட்டுமே பங்கு பெற முடியும்.


 EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல்


🔴 போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து பள்ளி அளவில் போட்டி வாரியாக போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பாகவே EMIS - ல் பதிவு செய்ய வேண்டும்

(19.08.2024 - 21.08.2024)


🔴 ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை போட்டி வாரியாக EMIS -ல் பதிவு செய்ய வேண்டும். (03.09.2024)


🔴 பள்ளி அளவில் முதலிடத்தில் வெற்றி பெறும் தனிநபர்/ குழு மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற 

தகுதி பெறுவர்.



🟢 *சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களை (CWSN)* பெரும்பான்மையான அளவில் போட்டிகளில் பங்கு பெறுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.


🟢 சில வகை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு ( *ID, ASD, CP)* மட்டும் ஒரு சில போட்டிகள் தனியாக நடைபெறும். 


🟢 இந்த போட்டிகளை சார்ந்த பள்ளிக்கான சிறப்பு பயிற்றுநர்களுடன் இணைந்து நடத்த வேண்டும்.


 🟢 அட்டவணையில் குறிப்பிடப்படாத குறைபாடு உள்ள மாணவர்களை ஊக்குவித்து மற்ற மாணவர்களுடன் இணைந்து அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற செய்ய வேண்டும்.


🟢 போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் படைப்புகளின் புகைப்படம் மற்றும் காணொளி சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் EMIS -ல் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


🟦 இந்த நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்தி அந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களையும் அனைத்து போட்டிகளிலும் பங்கு பெறச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.




No comments:

Post a Comment