Pages

Sunday, August 11, 2024

திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்!!!

 இன்று 11.08.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரம் ஸ்ரீ அமிர்தா மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் *குரு வணக்கம் நிகழ்ச்சி*  *பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா*  *பசுமை தமிழகம் திட்டம் தொடக்க விழா* என முப்பெரும் விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது ஏறத்தாழ 100 சங்க உறுப்பினர்கள் இதில் பங்கேற்று சிறப்பித்தனர். வித்யா பாரதி சேவா பாரதி தேசிய ஆசிரியர் சங்கம் ஆகிய அமைப்புகளில் இருந்து மாநில பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்பித்தனர். மாநிலத் துணைத் தலைவர் திரு முருகன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் *பகவத் கீதை* பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.ஸ்ரீ அமிர்தா கல்வியியல் கல்லூரியின் தாளாளர் மற்றும் வித்யா பாரதி அமைப்பின் மாநில நிர்வாகி டாக்டர் மாதவ பாரதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் அவருக்கு அமைப்பின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. புதுப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் துணை முதல்வர் திரு மோகன் அவர்கள் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய புதுமையான கற்றல் முறைகள் குறித்து விளக்கமாக பேசினார்.

சேவா பாரதி அமைப்பின் வட தமிழக அமைப்பாளர் மானனிய சீனிவாசன் ஜி அவர்கள் ஆசிரியர் பெருமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார் மதியம் அறுசுவை விருந்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.










No comments:

Post a Comment