Pages

Thursday, August 29, 2024

10,11 மற்றும் 12 துணைத்தேர்வு: மறுகூட்டல், மறுமதிப்பீடு பட்டியல் நாளை வெளியீடு !!!

 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல், மறுமதிப்பீடு விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது.


இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை: நடைபெற்று முடிந்த ஜூன் / ஜூலை 2024, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) / மேல்நிலை முதலாம் ஆண்டு(+1) / பத்தாம் வகுப்பு (SSLC) துணைத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள (Revaluation) தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் (Notification பகுதியில்) 30.08.2024 (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment