வணக்கம். பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்துவரும் வேளையில், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கற்றல் கற்பித்தல் பணிகள் பெருமளவில் முடங்கி உள்ளன.
கலந்தாய்வு தேதி இதுவரை அறிவிக்கப்படாததால், வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு உடன் நடத்திடவும், 01.08. நிலவரப்படி நிர்ணயிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களை ஏற்கெனவே உள்ள காலிப்பணியிடங்களுடன் கலந்தாய்வில் காண்பிக்கவேண்டும் என தங்களை கேட்டுக்கொள்கிறோம்
சென்ற கல்வி ஆண்டில் பணிபுரிந்த SMC தற்காலிக ஆசிரியர்களின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் பல மாவட்டங்களில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. நிலுவை தொகையினை உடன் வழங்கவும், மாணவர் நலன் கருதி SMC தற்காலிக ஆசிரியர்களை பள்ளிகளில் நியமனம் செய்ய உடனடியாக ஆணை பிறப்பிக்க தேசிய ஆசிரியர் சங்கம்- தமிழ்நாடு சார்பில் வேண்டுகிறோம்
மாநிலத்தலைவர் பொதுச் செயலாளர்
No comments:
Post a Comment