தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு வலியுறுத்திய கோரிக்கைகள்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு இணைந்துள்ள அகில பாரதீய ராஷ்டிரிய சைக்ஷிக் மஹா சங்கம்(ABRSM) தேசிய செயற்குழு கூட்டம் ஜூன் 15,16,17 ஆகிய மூன்று நாட்கள் நடந்தது.
இக்கூட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநிலத்தலைவர் திரு திரிலோகசந்திரன் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் மு.கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் இருந்து அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கடந்த கால செயல்பாடுகள் வருங்கால நிகழ்வுகள் குறித்து விவாதித்தனர்.
மேற்படி கூட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் பொதுச்செயலாளர் மு.கந்தசாமி அவர்கள் ஆசிரியர் மற்றும் மாணவர் நலம் சார்ந்த கீழ்க்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்
.
1) நாடு முழுவதும். தேசிய /பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு கடைசி ஊதியத்தில் 50% கிடைக்கும் பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
.
.
2) ஆசிரியர் மாணவர் விகிதம் 1:25 என உள்ளவாறு அனைத்து நிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களும் முறையான நியமனமாக கால முறை ஊதியத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும்(தரமான சமமான கல்வித்தரம் உறுதி செய்திட).
3) ஆசிரியர்கள் ஆண்டுதோறும் வருமான வரியாக பெரும் தொகை செலுத்தி வருவது மிக அதிருப்தி அளிக்கிறது ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு வருமான வரி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது தனி வருமான வரி விகித அட்டவணை வழங்கப்பட வேண்டும்
4)அனைத்து நடுநிலை உயர்நிலைப் பள்ளிகளிலும் NCC அமைப்பு செயல்பட வேண்டும்
5) NMMS தேர்வில் வெற்றி பெற்று பரிசுத்தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையும் பரிசுத்தொகையும் இரு மடங்காக
அதிகரிக்கப்பட வேண்டும்
6) 1-8. வகுப்பு போதிக்கும் அனைத்து வகை ஆசிரியர்களும் பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி பெற வேண்டும் என்ற வகையில் விவாதப் பொருளாகி உள்ள NCTE NOTIFICATION RTE சட்டம் நிறைவேற்றப்பட்ட 23-8-2010 க்கு முன் பணியேற்ற ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்ற அறிவிப்பாணை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7) 23-8-2010 இல் RTE சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு TET தேர்வு கட்டாயம் என 16-11- 2012
இல் தான் முறையான அறிவிப்பு வழங்கப்பட்டதை கருத்தில் கொண்டு இடைப்பட்ட காலத்தில் பணி நியமனம் பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் சிறுபான்மைபள்ளி ஆசிரியர்களுக்கும் தவிர்ப்பாணை வழங்கப்பட்டது போலும் கேரளா கர்நாடகா மகாராஷ்ட்ரா உத்தரப்பிரதேச மாநிலங்களில் 2013 வரை நியமிக்கப்பட்டவர்களை பணி வரன்முறை படுத்தியது போல தமிழ்நாட்டில் பணிபுரியும் சிறுபான்மையற்ற ஆசிரியர்களை பணி வரன்முறை படுத்தி 1500ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பு மற்றும் உரிய ஊதியம் உள்ளிட்ட இதர சலுகைகள் பெறவும் NCTE ஐ வலியுறுத்தி தவிர்ப்பாணை பெற வேண்டும்.
8) தமிழ்நாட்டின் பிற மாநில எல்லைப்புற மாநிலங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி வேலை வாய்ப்புகளில் பயன்பெறும் வகையில் மும்மொழிக்கொள்கை (அவர்கள் விரும்பும் தாய்மொழி) ஏற்கப்பட வேண்டும் .
9) நமது சங்க அமைப்பை CLUSTER அளவில் கொண்டு செல்வது தலையாய பணியாக இருக்க வேண்டும்
10) NEP 2020 ஐ அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும்.
11) ஆசிரியர்கள் முன் மாதிரியாக நடந்து கொண்டு சமூக பிரச்சனைகளை தீர்க்கப்பாடுபடுவதன் மூலம் மாணவர்களை மேற்படி பணியில் ஈடுபடுத்த முடியும் என்ற வகையில் பணியாற்ற வேண்டும் . ஆசிரியர்கள் சார்ந்த பிரச்சனைகளில் தீர்வு காண மத்திய அரசை தேசிய அமைப்பும் அந்தந்த மாநில அரசுகளை மாநில அமைப்புகளும் வலியுறுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்திற்கு தேசிய துணைத்தலைவர் மகேந்திரகுமார் தலைமை தாங்கினார்.
அமைப்புச்செயலாளர் மகேந்திர கபூர் , இணை அமைப்பு செயலாளர் லட்சுமண் பொதுச்செயலாளர் சிவானந்த சிந்தன்கரே வழிநடத்தினர்.
No comments:
Post a Comment