Pages

Saturday, May 4, 2024

NEET EXAM

 நாளை 05/05/2024 NEET தேர்வு!!!

2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது.  

தமிழ்நாட்டில் 1.50 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். 

தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உட்பட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடக்கும்.











அனைவருக்கும் வணக்கம்


 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் நீட் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.


1) நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பொழுது பயன்படுத்திய கலர் போட்டோ

போன்ற மற்றொரு போட்டோவை உங்களுடைய அனுமதி சீட்டில் ஓட்ட வேண்டும். (முதல் பக்கம் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ இரண்டாவது பக்கம் அஞ்சல் அட்டை அளவுள்ள ஃபோட்டோ) 

மேலும் முதல் பக்கத்தில் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவுடன் மாணவர் கைரேகை பதிவு

 அவசியம்.


2) அறை கண்காணிப்பாளர் உங்களுடைய அனுமதி சீட்டில் ஒட்டப்பட்டுள்ள கலர் போட்டோவை நீங்கள் முன்பே விண்ணப்பத்தில் ஒட்டியுள்ள கலர் ஃபோட்டோவுடன் ஒப்பிட்டு சரி பார்ப்பார்.


3) நீங்கள் உங்களுடைய அனுமதி சீட்டில் ஓட்டும் போட்டோவில் இடது புறம் நீங்கள் கையொப்பமிட வேண்டும். அதே போன்று அறை கண்காணிப்பாளர் உங்கள் போட்டோவின் வலது புறம் கையெழுத்திடுவார்.


4) தேர்விற்கு செல்லும் பொழுது கண்டிப்பாக இந்த நுழைவுச் சீட்டை எடுத்து செல்ல வேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.


5) தேர்வு முடிந்த பிறகு கண்டிப்பாக நுழைவுச்சீட்டை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு திரும்ப வேண்டும்.


 அப்பொழுது தான் உங்களது விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும்.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

*தேர்வு நாளன்று (05/05/2024)*


1) அனைத்து மாணவர்களும் தங்களுடைய நுழைவுச் சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாக சரியாக தேர்வு மையத்தை சென்றடைய வேண்டும்.


2) தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றடையா விட்டால் கண்டிப்பாக தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.


3) தேர்வு முடிவடைந்த பிறகு அறை கண்காணிப்பாளர் உங்களுக்கு சரியான அறிவுரைகள் வழங்கும் வரை யாரும் தேர்வு அறையை விட்டு வெளியில் வரக்கூடாது.


4) தேர்வு முடிந்த பிறகு எந்த ஒரு காரணம் கொண்டும் தேர்வறையில் எழுந்து நிற்பதோ, தேர்வு அறையை விட்டு வெளியே வர முயற்சி செய்வதோ தவிர்க்கப்பட

வேண்டும்.


 5) முதல் பக்கத்தில்- தேர்வு மையம் சார்ந்த விபரங்கள் சுய ஒப்புதல் படிவம் கொடுக்கப் பட்டிருக்கும்

 பக்கம் 2 - விண்ணப்பத்தில் முன்பே நீங்கள் ஒட்டியிருந்த போட்டோ போன்று மற்றொரு போஸ்ட் கார்டு அளவிலான போட்டோ ஒன்று ஒட்டப்பட்டு வேண்டும்.

 பக்கம் 3 தேர்வு சார்ந்த அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கும்.


6) நுழைவுச்சீட்டு அல்லது அனுமதிச்சீட்டு ஆனது தற்காலிகமானது.


7) நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் தேர்விற்கு முதல் நாளே தேர்வு மையத்தை பார்வையிட்டு தங்களுக்குரிய மையம் சரியானதா என்பதை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.


10) மேலும் மாணவர்கள் தேர்வுக்கு செல்லும் பொழுது அனுமதி சீட்டுடன் தங்களின் ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் , பான் கார்டு, போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.


(அது உங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்)


11) தேர்வு மையத்தில், தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்பாக உலோக சோதனைக் கருவி மூலம் கண்டிப்பாக சோதனையிட படுவீர்கள்.


 தேர்விற்கு கொண்டு செல்ல வேண்டிய பொருள்கள்:


i) ஒளி ஊடுருவும் நிலையிலுள்ள தண்ணீர் பாட்டில்.

ii) நீட் தேர்வுக்கான விண்ணப்பத்திலும், அனுமதி சீட்டிலும் பயன்படுத்திய அதே மாதிரியான பாஸ்போர்ட் சைஸ் அளவிலான போட்டோ ஒன்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

iii) போஸ்ட் கார்டு அளவிலான போட்டோ ஒட்டப்பட்டு அத்துடன் சுய ஒப்புதல் படிவம் கொண்ட அனுமதிச் சீட்டின் பக்கம் 2 கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

iv) அனுமதி சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியான முறையில் பூர்த்தி செய்தல் வேண்டும்.

v) *BLUE Or BLACK* பால் பாய்ன்ட் பேனா 

vi) மாற்றுத்திறனாளி மாணவ/ மாணவியர்கள் கண்டிப்பாக அதற்குரிய அடையாள அட்டையை உடன் எடுத்து செல்லப்பட வேண்டும்.அத்துடன் தங்களுக்கு (உங்களுக்குப் பதிலாக தேர்வு எழுத வரும்) வழங்கப்பட்டிருக்கும்

scribes அவர்களுடைய அடையாள அட்டையையும் சுய ஒப்புதல் படிவத்தையும் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

vii) சான்றொப்பமிட்ட எந்தவிதமான அடையாள அட்டைகளும் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.

viii) மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக தேர்வு எழுத வரும் SCRIBE அனைவரும் தங்களுக்கான அடையாள அட்டையையும், தங்களுடைய கல்வித் தகுதிக்கான அடையாள அட்டையையும், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அனைத்தையும் கொண்டு வரவேண்டும்.

ix) தேர்விற்கு வரும்போது மாணவர்கள் எந்த காரணம் கொண்டும் அலைபேசி போன்ற மின்னணு சாதனங்கள் எவற்றையும் கொண்டு வருதல் கூடாது.

x) மேலும் மாணவர்கள் தேர்விற்கு அனுமதிக்கப் பட்டுள்ள பொருட்கள் தவிர மற்ற எந்த விதமான பொருட்களையும் எடுத்து வருதல் கூடாது. மீறினால் தங்களுடைய பொருட்களை பாதுகாப்பதற்கு என்று பிரத்தியேகமான இடங்களோ அல்லது தங்களின் பொருட்களுக்கான பொறுப்புகளையோ யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

xi) தேர்விற்கு வரும் மாணவர்கள், தேர்விற்கென்று அனுமதிக்கப் பட்டுள்ள பிரத்தியேகமான உடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். உலோகம் சார்ந்த எந்தவிதமான பட்டன் மற்றும் அலங்கார பொருட்களோ உடைகளில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

xii) தேர்வின் பொழுது Rough Work மற்றும் கணக்கீடுகள் செய்வதற்கு அதற்கென்று வினாத்தாளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

xiii) தேர்வின் பொழுது மாணவர்கள் எந்த விதமான தேவையற்ற தகாத செயல்களில் ஈடுபடாத வண்ணம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

xiv) தேர்வு முடிவடைந்த பிறகு OMR (both original & office copy) விடைத்தாள்களை தேர்வறை கண்காணிப்பாளர் வசம் ஒப்படைத்த பிறகு தேர்வு அறையை விட்டு வெளியே வர வேண்டும்.

xv) NTA மூலமாக அனுப்பப்படும் SMS செய்திகளையும் ஈமெயில் களையும் தவறாமல் நாள்தோறும் அவரவர்கள் ஈமெயிலில் கண்காணிக்க வேண்டும்.

 தேர்வு சார்ந்த எந்தவிதமான சந்தேகங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ID மூலமாக தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.


neet@nta.ac.in

Helpline no. : 011-40759000  


▪️▪️▪️▪️▪️▪️▪️


 தேர்விற்கு முன்பான ஆயத்த பணி


1) தங்களுடைய அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நேரப்படி தேர்வு மையத்தை சென்றடைந்தால் கூட்டம் அதிகம் சேர்வதை தவிர்க்க முடியும்.


2) தேர்வுக்குரிய அனுமதிச்சீட்டை முழுமையாக பூர்த்தி செய்து தேர்விற்கு கொண்டு வருதல் வேண்டும்.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

 தேர்வு மையத்தில் நுழையும் பொழுது

1) மாணாக்கர்கள் அனைவரும் தங்களுடைய அனுமதி சீட்டில், கையொப்பம், விரல் பதிவு, பாஸ்போர்ட் சைஸ் மற்றும் போஸ்ட் கார்டு அளவிலான போட்டோ ஓட்டுதல் மற்றும் போட்டோவின் இடதுபுறம் கையொப்பம் இடுதல் போன்றவற்றினை சரியான முறையில் முடித்து தேர்விற்கு எடுத்து செல்ல வேண்டும்.

2) ID PROOFS களில் ஏதாவது ஒன்றை மறவாமல் கொண்டு செல்லவேண்டும்.

3) தேர்வு மையங்களுக்கு தேவையற்ற பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.

4) தேர்வுக்கு வரும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு மையங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள நபர்கள் மூலமாக தேர்வு அறைகளுக்கு செல்லும் வழி மற்றும் மாணாக்கர்களுக்கு தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️


 தேர்வின் பொழுது

1) தேர்வின்போது மாணவர்கள் வினாக்கள் சார்ந்து ஏதேனும் கணக்கீடுகள் அல்லது குறிப்புகள் எழுத வேண்டியிருந்தால் அதற்கென்று வினாத்தாளில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதற்கு பிறகு தாங்கள் கையில் எடுத்து வந்த பாஸ்போர்ட் சைஸ் அளவிலான போட்டோவை வருகை பதிவு தாளில் ஒட்டவேண்டும்.


▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

 தேர்வு முடிவடைந்த பிறகு


1) தேர்வு முடிவடைந்த பிறகு அறை கண்காணிப்பாளர் தேவையான அறிவுரைகளை வழங்கும் வரை மாணவர்கள் எவரும் தங்களுடைய இடத்தை விட்டு எழுந்திருத்தல் கூடாது.


2) அறைக் கண்காணிப்பாளர்கள் வசம் மாணாக்கர்கள் தங்களுடைய விடைத்தாள்களை ஒப்படைத்த பிறகு ஒவ்வொருவராக தேர்வு அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப் படுவீர்கள்.

3) தேர்வு முடிவடைந்த பிறகு மாணவர்கள் அனைவரும் தங்களுடைய அனுமதிச்சீட்டை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்த பிறகே தேர்வு அறையை விட்டு வெளியே வர வேண்டும்.


நன்றி!!!

No comments:

Post a Comment