✍🏼 தற்போது EMIS இணையதளத்தில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளின் விவரங்கள் தலைமை ஆசிரியர் Individual login ல் கொடுக்கப்பட்டுள்ளது.
✍🏼 Chrome ல் (Google ) சென்று login ல் தலைமை ஆசிரியர் Individual Id மற்றும் Password கொடுத்து உள்ளே சென்று dashboard ல் உள்ள Admission calls for Parents கிளிக் செய்யவும்.
✍🏼 கிளிக் செய்ததும் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் பெயர் விவரம் பிறந்த தேதியுடன் காட்டும்.
✍🏼 பின்பு அக்குழந்தைக்கு நேரே உள்ள update (Green Colour ) என்ற option ஐக் கிளிக் செய்யவும்.
✍🏼 திரையில் தந்தை மற்றும் தாயாரின் அலைபேசி எண் தோன்றும் ...
அதன் அடியில் அழைப்பின் விபரமும் தோன்றும்.
(தலைமையாசிரியர்கள் Emis இணையத்தில் உள்ள தாய் / தந்தையின் அலைபேசி எண்ணிற்கு call செய்து கீழே உள்ள option ஐத் தேர்ந்தெடுக்கவும் )
அழைப்பின் விபரம் :
1. அழைப்பிற்கு பதிலளிக்கப்பட்டது.
2. அழைப்பிற்கு பதிலளிக்கப்படவில்லை.
3. இப்பெற்றோருக்கான அலைபேசி எண் அல்ல.
4. தவறான எண்.
மேற்கண்ட நான்கு option ல் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Submit கொடுக்கவும்.
✍🏼 இவற்றில் அழைப்பிற்கு பதிலளிக்கப்பட்டது என்பதை தேர்வு செய்தால்
1. பதிலளித்தவர் யார் ?
2. ஏதேனும் பள்ளியில் குழந்தையை சேர்க்கை செய்யப்பட்டுள்ளதா?
3. ஆம் எனில்.
அரசு பள்ளி,
அரசு உதவி பெறும் பள்ளி,
தனியார் பள்ளி.
இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து Submit கொடுக்கவும்
No comments:
Post a Comment