Pages

Thursday, February 1, 2024

திருச்சிராப்பள்ளி மாநிலச் செயற்குழு - முழு விவரம்

 27/01/2024 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணாலயா திருமண மண்டபத்தில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு சிறப்பாக நடைபெற்றது. சரஸ்வதி வந்தனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. நமது சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் திரு சாய் சுப்ரமணியன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாநிலத் தலைவர் திரு திருலோக சந்திரன் தலைமை வகித்தார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு கீதா அவர்கள் தொகுப்புரை வழங்கினார். நமது சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு ராம ரத்தினம் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை முறையாக தொடங்கி வைத்தார். ஶ்ரீமான் டிரஸ்ட் திரு பராசர பட்டர் ஆசி உரை வழங்கினார்.  மாவட்ட கல்வி அதிகாரி (ஓய்வு )திரு விஜயேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் நமது சங்கத்தின் மாநில பொருளாளர், மாநிலத் துணைத் தலைவர்கள், மாநில இணை செயலாளர்கள், மாநில மகளிர் அணி செயலாளர், இணைச் செயலர், மாநில ஊடக அணி செயலர், இணைச்செயலாளர், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். பல்வேறு மாவட்டங்களில் நமது சங்கத்தினை விரிவுபடுத்தும் பணிகள், பள்ளிக்கல்வித்துறையில் உள்ள சிக்கல்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மாவட்ட வாரியான அறிக்கையை மாநிலத் துணைத் தலைவர் திரு விஜய் அவர்கள் வாசித்தார்.நம் சங்கத்தின் அடிப்படை சித்தாந்தமான முக்தி அளிப்பதே கல்வி விளக்கவுரையை மாநில இணைச்செயலாளர் திரு ரா ராஜகோபாலன் வழங்கினார். நிகழ்ச்சியில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். அனைவரின் ஒப்புதலோடும் மாநில செயற்குழு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த திருச்சி மாவட்டத்தை சார்ந்த பொறுப்பாளர்களுக்கு புத்தகப் பரிசு வழங்கப்பட்டது. தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் அவர்கள் ஆசிரியர்களுக்கு கருத்து கூறினார். நிறைவாக திருச்சி மாவட்ட செயலாளர் திரு ஆறுமுகம் அவர்கள் நன்றி கூறினார். நிறைவாக நாட்டு நல வாழ்த்து பாடப்பட்டது.

செய்தி வெளியீடு

மாநில ஊடகப்பிரிவு

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு

1. மாநிலச் செயற்குழு தீர்மானங்கள்

2. பத்திரிக்கை செய்திகள்



















No comments:

Post a Comment