Pages

Monday, January 1, 2024

RAMAYANAM PART 153

 இராமாயணம் தொடர்....153

இலட்சுமணன் - இராவணன் போர்!

👉 இராவணன் ஒளிவீசும் தேரில் ஏறி, தேவர்களை வென்ற வில்லை கையில் ஏந்திக் கொண்டு, யானைப்படைகளும், குதிரைப்படைகளும், காலாட்படைகளும் புடைசூழ வானர வீரர்களை கொல்ல போர்களத்திற்கு வந்தான். அங்கு தன் அரக்கப்படைகள் அழிவதை அறிந்து மிகவும் கோபங்கொண்டான். வானர வீரர்களும், அரக்கப்படைகளும் பெரும் ஆரவாரத்துடன் போர் புரிந்தனர். இராவணன் கோபங்கொண்டு இலட்சுமணனுடன் எதிர்த்து போரிட்டான். இராவணன் ஏவும் அஸ்திரங்களை இலட்சுமணன் எளிதாக உடைத்தெறிந்தார். இதைப்பார்த்த இராவணன், இலட்சுமணனை சாதரணமான அஸ்திரங்களை கொண்டு வீழ்த்த முடியாது என்பதை எண்ணி, தெய்வப் படைகலன்களை கொண்டு வீழ்த்த நினைத்தான். அதனால் இராவணன் சிவபெருமானால் உண்டாக்கப்பட்ட மோகாஸ்திரத்தை இலட்சுமணன் மீது ஏவினான்.

👉 இதைப் பார்த்த விபீஷணன் அந்தக் கணையை முறியடிக்க, இலட்சுமணனை நாராணயஸ்திரத்தை பிரயோகம் செய்யும்படி கூறினான். அதன்படி இலட்சுமணனும் நாராயணயஸ்திரத்தை பிரயோகம் செய்து மோகாஸ்திரத்தை வீழ்த்தினான். இதைக் கண்ட இராவணன், விபீஷணன் மீது கோபங்கொண்டு அவனை வீழ்த்த நினைத்தான். அதனால் அவன் மண்டோதரியின் தந்தை மயன், மண்டோதரியின் திருமணத்தின் போது சூலாயுதத்தை இராவணனுக்கு கொடுத்தான். அந்த சூலாயுதம், யாரைக் நோக்கி பிரயோகம் செய்தாலும் அது அவர்களை கொன்றுவிட்டு திரும்ப வரும். விபீஷணனை கொல்ல இராவணன் மயன் கொடுத்த சூலாயுதத்தை அவன் மீது பிரயோகம் செய்தான். இதைப்பார்த்த விபீஷணன் இன்று நிச்சயம் இந்த சூலாயுதம் என்னை வீழ்த்தப் போகிறது எனக் கூறினான். 

👉 இலட்சுமணன் சூலாயுதத்தை தடுக்க பல கணைகளை ஏவினான். அவை அனைத்தும் பயனற்று போனது. தங்களிடம் அடைக்கலம் புகுந்த விபீஷணனை காக்க எண்ணி இலட்சுமணன், அந்த கணையை தான் வாங்கிக் கொள்ள விபீஷணன் முன் வந்து நின்றான். இலட்சுமணனுக்கு முன் அங்கதன் வந்து நின்றான். அங்கதனுக்கு முன் சுக்ரீவன் வந்து நின்றான். சுக்ரீவனுக்கு முன் அனுமன் வந்து நின்றான். இப்படி அந்த கணையை வாங்க மாறிமாறி நின்றுக் கொண்டிருந்தனர். சூலாயுதம் நெருங்கி வரும் நேரத்தில் இலட்சுமணன் முன் நின்று அதை தன் மார்பில் வாங்கிக் கொண்டான். அந்த சூலாயுதம் இலட்சுமணனின் மார்பில் பட்டு அவரது உயிரை பறித்துச் சென்றது. இலட்சுமணன் நிலத்தில் வீழ்ந்தார். 

👉 இலட்சுமணன் வீழ்ந்ததை பார்த்து கோபம் கொண்ட விபீஷணன், இராவணனின் தேரையும், குதிரைகளையும் உடைத்தெறிந்தார். இராவணன், இலட்சுமணன் இறந்து விட்டான். போர் முற்று பெற்றுவிட்டது என நினைத்து அரண்மனைக்கு திரும்பினான். இலட்சுமணனின் அருகில் சென்று விபீஷணன் கதறி அழுதான். அப்பொழுது ஜாம்பவான், அனுமனிடம், அனுமனே! நீ உடனே சென்று சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து இலட்சுமணனை காப்பாயாக எனக் கூறினான். அனுமனும், உடனே வடக்கே சென்று சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து இலட்சுமணனுக்கு உயிர்ப்பித்தான். உயிர் பெற்ற இலட்சுமணன் எழுந்ததும், விபீஷணன் நலமாக இருக்கிறானா? எனக் கேட்டார். பிறகு அனுமனை கட்டி தழுவிக் கொண்டார்.

தொடரும்...!

No comments:

Post a Comment