Pages

Tuesday, January 9, 2024

தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு..

 



*தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு...*

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

      தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் இன்று (09.01.2024) சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளாகள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்க கட்டடத்தில் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒங்கிணைப்பாளர் திரு.த.அமிர்தகுமார் தலைமையில் நடைபெற்றது. 


   இக்கூட்டத்தில் அனைத்து சங்கங்களின் சார்பில் கலந்து கொண்டனர்.


புதிய பென்சன் திட்டத்தை இரத்து செய்து, ஏற்கனவே 01.04.2003 - க்கு முன்னர் நடைமுறையில் இருந்த பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்துவது  உள்ளிட்ட பல்வேறு தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசு தொடர்ந்து மெளனம் சாதித்து வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.


  ஏராளமான துறைவாரிக் கோரிக்கைகளை பேசித் தீர்க்க தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வரும் போக்கு குறித்தும் விவாதிக்கப்பட்டது.


கூட்ட முடிவில் கீழ்க்கண்ட போராட்ட முடிவுகள் தீர்மானங்கள் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டன.


09.01.2024 கூட்ட முடிவுகள்


1).20.01.2024 மாவட்டங்களில் போராட்ட தயாரிப்பு கூட்டங்கள்


2).30.01.2024 அன்று மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்.


3) 05.02.2024 முதல் 09.02.2024 வரை அனைத்து அரசு அலுவலங்கள், பள்ளிகளில், கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுப் பிரச்சார இயக்கம்..


4).15.02.2024 வியாழக்கிழமையன்று சென்னையில் பல்லாயிரக்கணக்கான அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம்..


5) 26/02/2024 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்..


  மேற்கண்ட போராட்டங்களை எழுச்சியுடன் நடத்துவது என கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் உறுதியேற்றுக் கொண்ட பின்னர்....


இறுதியாக தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைமை நிலையச் செயலாளர் எம்.சண்முகம் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

No comments:

Post a Comment