22/01/2024 அன்று திருச்சி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக கடமை உணர்வு தின விழா மாம்பழச்சாலை அருகே உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி வித்யாலயா பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் சுமார் 15 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அனைத்து ஆசிரியர்களும் கடமை உணர்வு தினம் குறித்த தகவல்களை பரிமாறிக் கொண்டனர். விரைவில் திருச்சியில் நடைபெற உள்ள மாநில செயற்குழு கூட்டம் குறித்த ஆயத்தப் பணிகளை துரிதப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.







No comments:
Post a Comment