Pages

Tuesday, November 28, 2023

டிசம்பர் 21ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் !!!

 அனைத்து அரசு  அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 21ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் !!!


தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு ,தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுநர் சங்கம், நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் சங்கம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டம் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் அமிர்தகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தேசிய ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கந்தசாமி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ந.ரெங்கராஜன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தலைவர்  மணிவாசகன் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் அலுவலர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2009க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்திட வேண்டும். உயர்கல்வி படித்தவர்களுக்கு மீண்டும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி மற்றும் நிலுவைத் தொகை, அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை வழங்குதல், காலிப்பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 21ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டிசம்பர் 3ஆம் தேதி நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மாவட்டம் தோறும் இக்கூட்டமைப்பின் தீர்மானங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அனைத்து சங்கங்கள் உள்ளடக்கிய மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

  தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு



No comments:

Post a Comment