Pages

Wednesday, August 2, 2023

ஆடி பெருக்கும் திருவரங்கம் கோவிலும் !!!

 தென்மேற்கு மழைப் பருவத்தில் நீர்பிடிப்பு இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனை ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இந்த இயற்கையின் கருணை ஆடி மாதத்தில் நிகழ்வதால், ஆடிப்பெருக்கு என்பர். விவசாயப் பெருமக்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் ‘ஆடிப் பட்டம் தேடி விதைப்பர்’. இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றைப் பயிரிட்டால் தை மாதத்தில் அறுவடை செய்யமுடியும்.

இந்த செல்வச் செழிப்புக்கு ஆதாரமான நதிகளைப் போற்றும்வகையில், ஆற்றங்கரைகளில் கூடி, பெருகிவரும் ஆற்றுக்கு பூஜை செய்து மகிழ்வர். இதேநாளில் கோயில்களிலும் வழிபடுவர். அன்றைய தினத்தில் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் இடத்தை சுத்தம் செய்து, பசும் சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன்முன் அகல்விளக்கு ஏற்றி வைப்பர்.

வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, ஊதுபத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு வழிகாட்டுமாறு வேண்டுகின்றனர். வாழை மட்டையில் விளக்கு ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்வதால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. தங்கள் வீட்டில் தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் என்று கலந்த சாதம் தயாரித்துக் கொண்டுவந்து ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவமழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும். காவிரி, தமிழ்நாட்டு எல்லையான ஒகேனக்கல்லில் நுழைந்து, கடலில் கலக்கும் பூம்புகார் வரையிலும் வாழும் மக்களால் கொண்டாடப்படும் பெருந்திருவிழா, ஆடிப்பெருக்கு. இந்தவகையில் மேட்டூர் அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, பரமத்தி-வேலூர், குளித்தலை, திருச்சி, பூம்புகார் முதலான இடங்களில் காவிரியை மக்கள் சிறப்பித்துக் கொண்டாடுகிறார்கள்.

திருரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று திருவரங்கம் கோயிலிலிருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறும்.

மாலைவரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்கலப் பொருட்கள் ஆற்றில் விடப்படும். நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி, அரப்பளீஸ்வரரை தொழுவது வழக்கம். பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரியில் மட்டுமாவது அணைகளைத் திறந்துவிட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர். காவிரித்தாயை வணங்குவோம், இனியாவது நீர் பெருகி நலம் பெருக்குமாறு இறைஞ்சி இயற்கை அன்னையை வேண்டிக்கொள்வோம்.


🔯தொட்டதை துலங்கவைக்கும் ஆடிப்பெருக்குத் திருவிழா... வழிபாடு செய்யும் முறைகள்!


🔯மாங்கல்யம் நீரைத் தெய்வமாக வழிபடும் மரபு நம்முடையது. இந்தப் பிரபஞ்சத்தின் ஆதாரசக்தியாக நீர் விளங்குகிறது.


நீரால் உணவு உண்டாகிறது. உணவே உயிரை வளர்க்கிறது. அத்தகைய நீரைக் கொண்டாடும் ஒரு திருவிழா 'ஆடிப் பெருக்கு'. தமிழர்களுக்கே உரிய தனிப்பெரும் பண்டிகை இது.


ஆடிப்பெருக்கு

இந்த நாளில் காவிரிக் கரைத் தலங்களிலெல்லாம் மக்கள் கூடி அன்னை காவிரியை வழிபடுவர். மேலும் 'இந்த நாளில் அனைத்து நீர் நிலைகளிலும் அன்னை காவிரி எழுந்தருளியிருப்பாள்' என்பது ஐதிகம்.


வாழ்வியல் ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆடிப் பெருக்கு வழிபாட்டை எப்படிச் செய்ய வேண்டும் என முனைவர் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகளிடம் கேட்டோம்...

முனைவர் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரி

“ஆடி மாதம் தமிழர்களின் வாழ்வியலில் மிகச்சிறந்த மாதமாகும். இந்த மாதத்தில்தான் பூமி தேவி அவதாரம் செய்தாள்' என்கின்றன புராணங்கள்.


வாழ்வாதாரமாகத் திகழும் உணவுப் பொருள்களை விளைவிக்கத் தொடங்கும் நாளே ஆடிப் பெருக்கு' என்கின்றன சாஸ்திரங்கள்.


ஒரு பெண்ணுக்கு வாழ்வில் ஐந்துவிதமான தாலியைச் சூடும் பாக்கியங்கள் வாய்க்கலாம்.


🔯திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் உள்ளிட்ட ஐந்து முறை மாங்கல்யத்தை அணிந்துகொள்வது பூரண வாழ்வின் அடையாளம்.*


ஆடிப் பெருக்கு...


ஜோதிட ரீதியாக ஆடிப்பெருக்கு மிகச்சிறந்த அம்சம் நிறைந்த நாளாகும்.


ஆடிப் பதினெட்டு அன்றுதான் சூரிய பகவான் பூச நட்சத்திரத்திலிருந்து ஆயில்யம் நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.


பூச நட்சத்திரம் சனி பகவானின் நட்சத்திரம்.


அதன் அதிபதி பிரகஸ்பதி என்றழைக்கப்படும் தேவகுரு.


சூரிய பகவான் தேவகுருவின் பார்வையில் இருக்கும்போது கட்டுப்பட்டே இருப்பார்.


அவர் தேவகுருவின் பார்வையிலிருந்து விடுபட்டு தன் நட்புக்கிரகமாகிய புதனின் நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரத்துக்குச் செல்லும் நாள் ஆடி பதினெட்டு. 'சூரியனும் புதனும் நட்புக் கிரகமாகையால் இன்றைய தினம் தொடங்கும் செயல்கள் எல்லாம் பல மடங்கு பெருகும்' என்பது ஐதிகம்.


ஆடிப்பெருக்கு

செடி, கொடிகளின் ஆதாரமாக விளங்குபவர் சந்திரபகவான். 


செடி கொடிகளைப் பராமரிக்க சூரிய சக்தி தேவை. எனவேதான், ஆடிப்பெருக்கு அன்று நவதானியங்களை மண்ணில் பரப்பி நீரும், நிலமும் சேர்கின்ற இடமாகிய ஆற்றுப் படுக்கையில் சேர்த்து இயற்கை அன்னையை வழிபடுகின்றனர்.


ஆடிப் பெருக்கென்று விதைத்தால்தான், தைமாதம் அறுவடை செய்யமுடியும். 'தைப் பிறந்தால் வழிபிறக்கும்' என்பார்கள்.


அதனால்தான் ஆடிப்பெருக்கென்று பசுமையைப் போற்றும் வகையில் பச்சையம்மன் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.


ஆடிப் பெருக்கு அன்று அதிகாலையில் துயில் எழுந்து கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி உள்ளிட்ட ஏழு நதிகளையும் மனதில் நினைத்துக் கொண்டு நீராட வேண்டும்.


அதன் பிறகு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி கணபதியை வழிபடவேண்டும்.


ஆடிப் பெருக்கு

கணபதியை தினமும் வழிபடுவதன் மூலம் ஆரோக்கியம் மற்றும் அமைதியைப் பெற முடியும். 


ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி சர்ப்ப தெய்வங்கள். சர்ப்ப தெய்வங்களின் தலைவர் 'அனந்தன்' எனப்படும் 'ஆதிசேஷன்'. எனவே, கணபதியைப் பிரார்த்தித்த பிறகு ஆதிசேஷன் எனப்படும் நாக தெய்வத்தைப் பிரார்த்திக்க வேண்டும்.


அதன் மூலம் தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும்; 


நம் உணவுப் பொருள்கள் அனைத்தும் நஞ்சற்றதாகி, அமிர்தமாகும் என்பது ஐதிகம்.


ஆடி பதினெட்டு அன்று புத்தாடை உடுத்தி பெரியோர்களின் ஆசியைப் பெறவேண்டும்.


பெரியோர்களின் வாழ்த்து, வெற்றியையும் அமைதியையும் கொடுக்கும். பிறகு, வீட்டின் பூஜை அறையில் ஒரு சொம்பில் தூய நீர் நிரப்பி வைக்கவேண்டும்.


சொம்பு முழுவதும் நிறைந்திருக்கும் தண்ணீர் மகாலட்சுமியை வீட்டுக்கு அழைக்கும் மகத்துவம் வாய்ந்தது.


ஆடிப்பெருக்கு

அதன் பிறகு ஆற்றுப்படுகை, நீரோடை அல்லது நீர் நிலை ஏதேனும் ஒன்றுக்குச் சென்று காவிரித் தாயை வழிபடவேண்டும். தலைவாழை இலையில் வெற்றிலை - பாக்கு, மஞ்சள் குங்குமம், வாழைப்பழம், தேங்காய், பலகாரங்கள் ஆகியவற்றைப் படைத்து அகல்விளக்கு ஏற்றி வைத்து, பார்வதி தேவியின் அம்சமான பச்சை அம்மனை மனதில் நினைத்துக் கொண்டு, எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என்றும் வணங்கவேண்டும்.


முடிந்தவர்கள், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், தயிர்ச் சாதம், கற்கண்டு சாதம், சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட ஐந்து வகையான உணவுகளைத் தயார் செய்து பச்சை அம்மனுக்கு நைவேத்யம் செய்ய வேண்டும். 


இந்த வழிபாட்டின் மூலம் தேவியின் அருளால், அந்த ஆண்டு விவசாயம் செழித்து விளங்கும் என்பது நம்பிக்கை.


ஆடிப்பெருக்கு

புது தம்பதியர் தம் வாழ்க்கை சுபமாக அமைய வேண்டும் என்று திவ்ய மங்கலங்களாகிய பாக்கு - வெற்றிலை, மஞ்சள் - குங்குமம், தாலிக்கயிறு, வளையல் ஆகியவற்றை சுமங்கலிப் பெண்களுக்குத் தானமாக வழங்கி நீரும் நிலமும் இணையும் நீர் நிலைகளில் பூஜை செய்யவேண்டும்.


இப்படிச் செய்வதன் மூலம் காலம் முழுவதும் பூவோடும், பொட்டோடும், சுமங்கலியாக வாழும் பேறு கிடைக்கும்.


அதன்பிறகு தாலிக் கயிற்றை மாற்றிக்கொள்ளலாம்.


ஒரு பெண்ணுக்கு வாழ்வில் ஐந்துவிதமான தாலியைச் சூடும் பாக்கியங்கள் வாய்க்கலாம்.


திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் உள்ளிட்ட ஐந்து முறை மாங்கல்யத்தை அணிந்துகொள்வது பூரண வாழ்வின் அடையாளம். 'இந்த ஐந்துவித மாங்கல்யங்களும் தனக்குக் கிடைக்க வேண்டும்' எனும் வேண்டுதலின் அடிப்படையிலேயே ஆடிப் பெருக்கு அன்று தாலி மாற்றும் வழக்கம் உண்டானது.


ஆடிப்பெருக்கு

பெண்களுக்கான அதிசிறப்பு வாய்ந்த நாள்தான் ஆடிப் பதினெட்டு நாளாகும்.


இன்றைய நாளில் கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் புத்தாடை எடுத்துக்கொடுத்து மகிழலாம்.


தொட்டதெல்லாம் பலமடங்கு பெருகும் புண்ணிய தினமான ஆடிப் பெருக்கு தினத்தில் பூமித் தாயையும் காவிரித் தாயையும் வழிபட்டுப் பேறு பெறுவோம்”


⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜



No comments:

Post a Comment