அனைவருக்கும் வணக்கம். தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி மாவட்ட கிளை சார்பில் இன்று (12/08/2023) திருச்சி தேசிய கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் குரு வணக்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இறை வணக்கத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட செயலாளர் திரு ஆறுமுகம் வரவேற்புரை வழங்கினார். திருச்சி மாவட்ட தலைவர் திரு சாய் சுப்ரமணியம் அவர்கள் தலைமை வகித்தார். விழா பேருரையை தேசிய கல்லூரி முன்னாள் இயற்பியல் துறை தலைவர் திரு ஸ்ரீனிவாசன் அவர்கள் வழங்கினார். வேத வியாசர் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் சிறப்பு கூறுகளை அருமையாக எடுத்துரைத்தார். தேசிய ஆசிரியர் சங்கத்தின் செயல்பாடுகளை மாநில மகளிர் அணி செயலர் திருமதி ஸ்ரீ சாருமாதேவி அவர்கள் எடுத்துரைத்தார். மாநில இணைச் செயலாளர்கள் திரு இராகவன் மற்றும் திரு ராஜகோபால் அவர்கள் உரையாற்றினர். நமது சங்கத்தின் ஊடக துறையின் செயல்பாடுகள் குறித்து மாநில ஊடக இணைச் செயலர் திரு வா ஶ்ரீராம் எடுத்துரைத்தார். ஆசிரியர் சங்கத்தின் முன்னோடி உறுப்பினர்கள் திரு இராமரத்தினம் மற்றும் திரு முரளி அவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட மகளிர் அணி செயலாளர் கீதா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாவட்ட பொருளாளர் சோமு அவர்கள் நன்றி கூறினார். திருச்சி மாவட்ட தலைவர் சாய் சுப்ரமணியன் மற்றும் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
நாட்டு நல வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment