Pages

Thursday, August 10, 2023

அறிவியல் அறிஞர் - வைணு பாப்பு பிறந்த தினம் !!!

 ஆகஸ்ட் 10,

வரலாற்றில் இன்று.


மணாலி கல்லாட் வைணு பாப்பு (Manali Kallat Vainu Bappu, ஆகஸ்ட் 10, 1927 - ஆகஸ்ட் 19, 1982) நிசாமையா வானாய்வகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு அனுபவம் வாய்ந்த வானியலாளரான சுனன்னா பாப்புவின் மகன் ஆவார். 


இந்தியாவின் மிகப்பெரிய வானியல் ஆய்வுத் தொலைநோக்கி அமைந்திருப்பது வேலூரின் காவலூரில். வைணு பாப்பு வானாய்வகம் (Vainu Bappu Observatory) எனப்படும் இது, இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் நிறுவப்பட்டது. இந்திய இயற்பியலாளரும், இந்திய வானியல் முன்னோடியுமான வைணு பாப்பு அவர்களின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்குள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி ஆசியாவிலேயே மிகப் பெரியது.


வைணு பாப்பு 1960ஆம் ஆண்டுகளில், கொடைக்கானல் வானியல் ஆய்வகத்தின் இயக்குநராக இருந்தார் 


 ஜவ்வாது மலையில் உள்ள சிறிய கிராமமான காவலூரைத் தேர்ந்தெடுத்து, ஆய்வகம் அமைத்தார். அப்போது, ‘காவலூர் வானியல் ஆய்வகம்’ என்று அழைக்கப்பட்டது. 1968ஆம் ஆண்டு 38 செ.மீ. விட்டமுடைய ஒரு தொலை நோக்கியுடன் காவலூர் தொலை நோக்கியகம் தொடங்கியது. 1971ஆம் ஆண்டு வியாழன் கோளின் பரப்பில் ஏற்படும் மாறுபாடுகளைப் பற்றி ஆராய 61 செ.மீ. விட்டமுள்ள எதிரொளிக்கும் தொலைநோக்கி நிறுவப்பட்டது. இந்த வானாவாய்கம், பல சிறப்பான விஷயங்களைக் கண்டறிந்துள்ளது. அவற்றில் சில...


• 1972... ஒரு மீட்டர் தொலைநோக்கியின் உதவியுடன், வியாழன் கோளின் நிலவுக்கு வளிமண்டலம் இருப்பது கண்டறியப்பட்டது.


• 1977... யுரேனசு கோளைச் சுற்றி வளையம் இருப்பது கண்டுபிடிப்பு.


• 1988 பிப்ரவரி 17... ஒரு சிறு கோள் ராஜமோகன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. 


இந்தியா கண்டுபிடித்த 20ஆம் நூற்றாண்டின் முதல் கோள் இது. அதற்கு ‘4130 ராமானுஜன்’ என்று பெயரிடப்பட்டது.


• 1984... சனி கோளைச் சுற்றி ஒரு மெல்லிய கோள்வெளி வளையம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


• ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணியிலிருந்து 10 மணி வரை, வைணு பாப்பு தொலைநோக்கி எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கப்படுகிறது.


வைணு பாப்பு பள்ளிப்படிப்பின் போது அவரது மேடைப் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தார். கல்லூரியில் அறிவியல் குழுவைத் தொடங்கினார்; கல்லூரி இதழின் ஆசிரியராக இருந்தார். 1943இல் வைணு பாப்பு பயின்ற கல்லூரியில் சொற்பொழிவாற்ற

 சர்.சி.வி.இராமன் வந்திருந்தார். அப்போது வைணு, தினமும் 16 மைல் சைக்கிளில் பயணித்து, ஒரு நாளும் தவறாது சொற்பொழிவைக் கேட்டாராம்! டென்னிசு, கிரிக்கெட் ஆகிய விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு விமான ஓட்டுநராக வேண்டுமென்ற விருப்பம் வைத்திருந்தார் வைணு.

வைணு பாப்பு ஒரு தொழில்முறை அல்லாத ஓவியர்; பழங்காப்பியங்களில் அதிகம் விருப்பம் கொண்டிருந்தவர். ஆங்கில, உருது கவிகளில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். அவருக்குப் பிடித்த கவிஞர் மிர்சா காலிப். The Spirit of St Louis என்ற நூல் அவருக்கு மிகவும் பிடித்ததாகும்.



No comments:

Post a Comment