Pages

Sunday, August 20, 2023

நாக சதுர்த்தி - 20/08/2023

 இந்திய ஆன்மீக லவுகீக‌ வாழ்வில் பசுக்கள் எப்படி முக்கியமோ, பசுக்கள் எப்படி கொண்டாடப்பட்டதோ, எப்படி வழிபாடு செய்யப்பட்டதோ அதன் அடுத்த இடத்தில் நாகங்கள் இருந்தன‌.

நாக வழிபாடு என்பது இந்துமதத்தின் பெரும் அடையாளமாக இருந்தது, உலகம் முழுக்க இருந்த இந்துமதம் இந்துஸ்தானில் சுருங்கிய பின் அது இங்கே பிரதானமானது, சீனா போன்ற நாடுகளில் அது அடையாளமானது.

பாம்பு நடனம் என அவர்கள் ஆடி தொடங்கும் புத்தாண்டு அவர்களின் வழிபாட்டு நிகழ்வு அன்றி வேறல்ல‌.

இந்துமதம் நாகத்தை  பிரதானமாக்கியது, அதற்கு மிக முக்கிய காரணங்களும் இருந்தன‌.

அணுவுக்குள் துகள்கள் சுழல்வது போல, அண்டத்தில் கோள்கள் சுழல்கின்றன. இந்த இரண்டுக்கும் ஒரு தொடர்பு உண்டு, பொதுவிதி உண்டு என்பது விஞ்ஞானத்தின் கூற்று.  ஆனால் பொதுவிதி ஒன்றை வகுக்கமுடியாமல் இன்னும் வழி தேடிக்கொண்டிருக்கின்றது

ஆனால் இந்துக்கள் பாம்பின் வடிவத்துக்கும் உடலின் முக்கிய நுணுக்கத்துக்கான தொடர்பை கண்டார்கள், அந்த பெரும் சக்தி பாம்பு வடிவில் உடலில் ஆடுவதை தங்கள் ஞானத்தால் உணர்ந்தார்கள்.

ஒரு உயிர் உருவாகக் காரணமான விந்துவின் உயிரணு பாம்பு வடிவில் இருப்பதை இன்றைய விஞ்ஞானம் சொல்கின்றது. அதனை இந்துக்கள் என்றோ உணர்ந்திருந்தார்கள்.

அனுதினமும் கோடிக்கணக்கான செல்கள் இறக்கும் உடல் இது, உடல் மாறிக்கொண்டே இருக்கின்றது, பாம்பு சட்டையினை கழற்றுவது என்பதை செல்களின் அழிவுக்கு சொன்னார்கள்.

பாம்பு சுருண்டிருப்பதை போல கருவில் உயிர் சுருண்டே இருக்கின்றது என்பதை சொன்னார்கள், பாம்பு தவழ்வதை போலவே மானிடனும் தவழ்ந்து வளர்கின்றான் என்பதை அனுமானத்தால் சொன்னார்கள்

அதனாலே பாம்புக்கும் பாம்புக்குமான பொதுப் பொருளாய் பாலை வைத்தார்கள்

இன்று டி.என்.ஏ எனும் மரபணு பாம்பின் வடிவத்தில் நாகவடிவத்தில் இருப்பதை விஞ்ஞானம் சொல்கின்றது, இரு பாம்புகள் வடிவில் இருப்பதை விஞ்ஞானம் சொல்கின்றது.

அந்த மரபணுவின் சக்தி இன்னொரு பெரும் சக்தியால் இயக்கப்படுகின்றது. அதுதான் நாகசக்தி என்பதை உணர்ந்து இரு நாகங்களை வணங்க சொன்னார்கள் இந்துக்கள்.

இந்த வழிபாடு எல்லா இனத்திலும் இந்து மதத்தில் இருந்து சென்றது, அது ஐரோப்பாவில் இருந்தது, யூதர்களிடம் இருந்தது.

பாம்பை வணங்கினால் நலமடையலாம் எனும் நம்பிக்கை எக்காலமும் உண்டு, இன்று நவீன உலகின் மருத்துவ அடையாளம் இணைந்த நாகங்களே.

அதை கொடுத்தமதம் இந்துமதம், இன்றுவரை அதை வழிபட்டுப் பின்பற்றி வருவதும் இந்துமதம்.

பாரதம் முழுக்க இந்த நாகவழிபாடு உண்டு.

நாகம் என்பது உயிரை எடுக்கமட்டுமல்ல, உயிரைக் கொடுக்கவும் செய்யும். உயிரைக் கொடுக்கும் சக்தி அதற்கு உண்டு என்பதால் வணங்கப்பட்டது.

குறிப்பாக சந்ததிகள் பெருக, நோய் நீங்க அது வணங்கப்பட்டது.

பாம்பின் நஞ்சில் இருந்து பெரும் மருந்துகளை சித்தர்கள் தயாரித்தார்கள், நாக பாஷாணம் சரியான முறையில் பல பொருட்களுடன் சேர்க்கப்பட்டபோது அது மருந்தானது.

பாம்பை வணங்க வணங்க ஒரு உயிரின் தன்மை மாறும், அந்த உடல் நலமடையும் தெளிவடையும், பாம்பின் வடிவத்தில் ஒரு சிலையினை வணங்க வணங்க பல நன்மைகள் எங்கிருந்தோ பிரபஞ்சம் கொடுப்பதை இந்துக்கள் உணர்ந்தார்கள்.

பாம்பின் வழிபாட்டால் சந்ததி செழித்தது என்பதையும், நோய்கள் அகன்றது என்பதையும் அறிந்தார்கள்.

உடலில் நோய் ஏற்பட விஷத்தன்மையே காரணம். ஏதோ ஒரு வகையில் விஷம் உடலில் சேர்வதாலேயே நோய் உருவாகின்றது, இந்த விஷத்தை நாக வழிபாடு அகற்றும் என்பதை அனுபவத்தால் கண்டார்கள்.

இன்று உலகை மிரட்டும் புற்றுநோயினைக் கூட நாக வழிபாடு சரியாக்கும் எனும் நம்பிக்கை அன்றே இருந்தது, 

புற்றுநோய் உலகில் புதிதல்ல; சித்தர்கள் காலத்திலே அது அடைப்பு நோய் என வழங்கப்பட்டிருக்கின்றது, உடலில் சேரும் விஷத்தால் அது உருவாகும் என்றார்கள் சித்தர்கள்.

அன்று வெகு அபூர்வமாக இருந்த நோய் இன்று ரசாயன உலகில் ரசாயான உணவுகளால் இயல்பாகிவிட்டது, மானிட தவறுகளும் அதிகம்.

இஞ்சி, பூண்டு உடலுக்கு நல்லது. ஆனால் தனித் தனியாக சேர்க்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக சமைத்தால் சிறிது விஷமாகும் என்பார்கள்.  இப்படி மானிட தவறுகள், ரசயானம் என பல வகைகளால் புற்றுநோய் பெருகிவிட்டது.

அன்று புற்றுநோய்க்கு சர்ப்ப வழிபாடும், புற்றுமண்ணும் மருந்தாக இருந்தது. நாகத்தின் விஷத்தில் தயாரிக்கப்படும் நவபாஷாணம் போன்ற மருந்துகள் நோயினை தீர்த்தன என்கின்றன அக்காலக் குறிப்புகள்.

ஆம், நாகவழிபாடு புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் என்பது அன்றே இருந்த வழமை.

இந்துஸ்தானில் இப்படி நாகங்கள் கொண்டாடப்பட்டன, அவைகளுக்கான வழிபாடு எல்லா ஆலயங்களிலும் உண்டு.

ஷண் மதம் என ஆறுபிரிவுகள் இருந்தாலும், அந்த ஆறுபிரிவுகளிலும் நாகம் தனி அடையாளமாய் இருந்தது, நாகமே ஆதி தெய்வமாய் இருந்தது.

அதன் அடையாளமாக இந்தியாவில் எல்லா இந்து ஆலயங்களிலும் நாகம் தனி இடம் பெற்றது, பல இடங்கள் ஆலயங்கள் நாகத்தின் பெயராலேயே அறியப்பட்டன‌.

நாகலாந்து முதல் நாகப்பட்டினம், நாகர்கோவில் என நாகத்தின் பெயர்களை பாரதம் முழுக்க காணமுடியும்.

திருவாரூரின் புற்றீசரும், வன்மீகநாதர் எனும் சிவனும் புற்றுவடிவில் வழிபட்ட சிவலிங்கங்களே, காளஹஸ்தி கூட நாகத்தின் பெயரில் உருவானதுதான், எல்லா தொடக்கமும் நாக வழிபாட்டில் இருந்தன‌.

இந்த வழிபாடு பாரதமெங்கும் இருந்தாலும், வேதம் வாழும் பரசுராமனின் பூமியான கேரளத்தில் உன்னதமாய் இருந்தது.

ஜம்மு & காஷ்மீரில் உள்ள அனந்த்நாக், ஷேச நாக், குஜராத்தில் உள்ள புஜ் மற்றும் கேரளாவில் உள்ள மன்னார்சாலா, திருநாகேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நாகத்திற்கென முக்கிய கோவில்கள் உண்டு.

கர்நாடகா நாகதேவி கோவிலும், குக்கே சுப்ரமண்யா கோவிலும் பிரசித்தியானவை, அங்கும் நாகத்தின் ஆலயங்கள் நிறைய உண்டு.

ஆந்திராவின் கர்னூலில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலும் நாகங்களுக்கு முக்கியமானது.

நாகர்கோவில் எனும் நாகத்தை மூலவராக கொண்ட அந்த ஆலயம் கேரள ஆலயமாகத்தான் இருந்தது; பின்னாளில் தமிழகத்தோடு இணைந்தது. அதன் மூலம் மலையாளமே.

அந்த அளவு கேரளாவில் நாக வழிபாடு பிரசித்தியானது, ஏகப்பட்ட ஆலயங்கள் நாகத்துக்காக அங்கு உண்டு எனினும், மேக்கோடு நாக ஆலயமும், மன்னாரசாலை ஆலயமும் பிரசித்தியானது.

அந்த மன்னாரசாலை ஆலயம் நாகவழிபாட்டுக்குத் தனி அடையாளமாய் பெரும் ஆச்சரியமாய், இன்றுவரை மாபெரும் அதிசயம் நிறைந்த ஆலயமாய், இந்துக்களின் நாக வழிபாட்டுக்கு பெரும் சாட்சியாய் நிற்கின்றது.

அந்த ஆலயம் உருவான விதம் மிகத் தொன்மையானது, யுகங்களைக் கடந்தது. அவ்வகையில் பல்லாயிரம் வருடமாக யுகங்களை கடந்து நிற்கும் ஆலயம் அது.

அதனைத் தொடங்கி வைத்தவர் பரசுராமர், பரசராமர் தன் அவதாரம் முடியும் போது, வேதங்கள் வாழ ஒரு பூமியினை உருவாக்க எண்ணி சிவனிடம் வரம் கேட்டார்.

அவர் கோடரி விழும் இடத்தில் இருந்து கடல் ஒதுங்கி வழிவிடும், அந்த நிலத்தை எடுத்துக்கொள் என்றார் சிவன்.

அப்படியே தன் கோடரி எனும் மழுவினை அவர் வீச அந்த கடல் நகர்ந்து மலைப்பாங்கான இடம் ஒன்று உருவானது.

ஆனால் உப்புசுவையும் உவர் நிலமுமான அங்கு உயிர்கள் வாழமுடியாது, பரசுராமர் மறுபடியும் சிவனை வேண்டினார்.

உயிர்கள் பிறக்கவும், நிலம் செழிக்கவும், பசுமை நிலைக்கவும் நாகராஜனின் அருள் வேண்டும், நீ அவரை வேண்டினால் இந்த பூமி செழிக்கும் என பதில் கிடைத்தது.

பரசுராமன் தவமிருந்து நாகராஜாவினை அழைக்க நாகராஜா வந்து ஆசீர்வதித்தார், அந்த கேரளம் செழித்தது.

அப்படி நாகராஜா வந்து அமர்ந்த இடம் பரசுராமனின் தீர்த்தசாலை, அந்த தீர்த்தசாலை, மந்திர சாலை என்றும் அழைக்கப்பட்டு மன்னார் சாலை என்றானது.

இந்த மன்னார்சாலைதான் உலகிலேயே நாகங்களுக்கான மிகப்பெரிய ஆலயம், முதல் மாபெரும் ஆலயம்.

இங்கே நாகராஜாவின் அருளில் எக்காலமும் மாபெரும் நாகங்கள் உண்டு. அவை, ஆலயத்தின் உட்புறத்தில் உண்டு. ஆனால் யாருக்கும் எந்த தீங்கும் இதுவரை இழைத்ததில்லை. ஒரு சிறிய சலசலப்புக் கூட வந்ததில்லை.

ஆலப்புழா அருகே அமைந்திருக்கும் அந்த ஆலயம் பெரியது, அங்கிருக்கும் நாக சிற்பங்களின் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரம்.

விதவிதமான நாக வடிவங்கள் அங்கே அப்படி ஆயிரகணக்கில் உண்டு.

ஏன் அப்படி அத்தனை ஆயிரம் வடிவங்களை ஸ்தாபித்தார்கள் என்றால் காரணம் இல்லாமல் இல்லை, அங்கேதான் இருக்கின்றது நுணுக்கமான நாக வழிபாடு.

மனித உடல் சூட்சுமமானது. அதன் நோய்களும் பிணியும் மருந்தினால் மட்டும் குணமாவதில்லை. அதாவது வாய்வழி உள்ளே செல்லும் மருந்துகள் மட்டும் நோயினை குணமாக்குவதில்லை.

உடலின் விஷமானது உள்ளே செல்லும் உணவினால் மட்டும் ஏற்படுவதில்லை. அது காற்று, கதிர்வீச்சு, சுற்றுப்புறம், பார்க்கும் விஷயத்தின் அதிர்வு என எல்லாவற்றிலும் உருவாகும்.

அதாவது ஒருவனை அவன் சுற்றுபுறமும், அதிர்வுகளும், காற்றும், பார்வையும் கூட நோயுற்றவனாக்கும்.

அப்படியே சில அதிர்வுகளாலும், பார்க்கும் விஷயங்களாலும் நோயினை குணப்படுத்தவும் முடியும்.

பாம்பின் வடிவங்கள் நோயினை தீர்க்கும் என்பது நம்பிக்கை, பாம்பின் வடிவம் மரபணு மற்றும் உடலை இயக்கும் செல்களின் வடிவினை ஒத்திருக்கும்.

இந்த வடிவங்களைக் காணும் போது உடலின் சில நுணுக்கமான செல்கள் அல்லது அணுக்கள் தங்கள் வடிவத்தை மாற்றும், அப்போது உடல் தானே சரியாகும்.

பாம்பின் வடிவத்தைக் காணும்போது, உடலின் செல்கள் தன்னை சரிசெய்யும், நோயுற்ற செல்கள் குணமாகும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

(யூதர்களின் தோரா இதை சொல்கின்றது, பாலை நிலத்தில் மக்கள் சாகும் போது அவர்கள் தெய்வம் ஒரு பாம்பை வெண்கலத்தில் செய்து உயர்த்தி பிடிக்க சொல்கின்றது.

அதைக்காணும் மக்களெல்லாம் குணமடைந்தார்கள் என்கின்றது.

இந்த பாம்பு வடிவம்தான் இன்று மருத்துவ அடையாளமாக மாறி நிற்கின்றது, நாம் மருத்துவரின் அடையாளமாக உலகளாவில் காணும் அந்த லச்சினை அதுதான், அந்த சாயல்தான்)

இந்த நுணுக்கத்தில்தான் 30 ஆயிரம் பாம்பு சிலைகள் வைக்கபட்டிருக்கின்றன‌.

உண்மையில் பல பாம்பு வடிவங்களை இந்துக்கள் செய்ததெல்லாம் நோய் தீர்க்கும் மருத்துவமே, அப்படித்தான் வடித்து தீர்வுகளும் சொன்னார்கள்.

நாக மருத்துவ இலக்கணம் அதை தெளிவாகச் சொல்கின்றது.

புத்திர பாக்கியம் கிடைக்க அனந்தாவையும், புத்திரி பாக்கியம் கிடைக்க வாசுகியையும், குஷ்ட ரோக நிவாரணம் பெற கார்கோடனையும் பூஜிக்க வேண்டும்.

பலப்ராப்தி  பெற தக்ஷன், குணப்ராப்தி  பெற பத்மா, சூட்டினால் ஏற்படும் ரோக வியாதிக்கு குணம் பெற  நாக ஷங்கபலா எனும் ஷங்ககர்னாவையும்  வணங்கிப் பூஜிக்க வேண்டும்.

பூர்வ ஜென்ம பாபம் அகல  கேஷா, குளுமை வியாதியினால் அவதிப்படுபவர்கள் குளிகை மற்றும்  மோட்ஷப்ராப்தி பெற மகாபத்மாவையும் வணங்கி பூஜிக்க வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நோய் தீரவும், ஒவ்வொரு வரம் பெறவும், ஒவ்வொரு நாக வடிவம் அவசியம். இதனாலேயே 30 ஆயிரம் நாகங்கள் வடிவம் அங்கே உண்டு.

அங்கே தீரா நோயில்லை, கிடைக்கா வரமில்லை.

எல்லா நோய்களும் அங்கே தீரும், எல்லா வரமும் அங்கே கிடைக்கும். நாக சிற்பங்களின் வலிமையும், அந்த ஆலயத்தில் அன்றாடம் நடக்கும் பூஜைகளின் சக்தியும் அப்படியானது.

அந்தக் கோவிலில் எல்லா பிணியும் நோயும் தீர்ந்தாலும் மிக முக்கியமான ஒன்று குழந்தை வரம்.

அதற்கு அவர்கள் மிக வித்தியாசமான முறையினை தொன்றுதொட்டு, அதாவது பரசுராமர் காலத்தில் இருந்தே பின்பற்றுகின்றார்கள்.

அந்தக் கோவிலில் பெண்கள்தான் பூசாரிகள், முதிர்ந்த வயதுடன் பூசாரியாக வருவார்கள்.

(அப்படி சமீபத்தில் அங்கே 93 வயது அம்மணி உமாதேவி அந்தர்ஜனம் அம்மையார் காலமாகிவிட, அடுத்து சாவித்திரி அந்தர்ஜனம் புதிய பொறுப்பாக நியமிக்கபட்டிருக்கின்றார்.


இவர்கள் வாலியம்மா அல்லது வலியம்மா என, அதாவது சர்வ சக்திவாய்ந்தவர் எனும் பொருளில் அழைக்கபடுகின்றார்கள்.

பாம்புகள் அதுவும் ராஜநாகங்கள் நிறைந்த தலைமை பீடத்தில் இவர்கள்தான் பூஜை செய்வார்கள். நாகங்கள் அப்போது கோசாலை பசுக்கள் போல இவர்களை சுற்றிச் சுற்றி வரும்.

பசுக்களுக்கு கோசாலை போல, நாகங்களுக்கான நாகசாலை அந்த மன்னாரசாலை)


குழந்தைவரம் வேண்டுவோர் அங்கு சென்று தங்கள் வேண்டுதலை வைத்து உருளி எனும் சிறிய பாத்திரத்தை கவிழ்த்துவைப்பர், பின் மனமார வேண்டி நாக தரிசனம் செய்துவிட்டு கிளம்புவார்கள்.

உரியநாளில் அவர்களுக்கு பதில் கிடைக்கும். பின் குழந்தையோடு வந்து அந்த உருளியினை நிமிர்த்தி வைத்து வழிபட்டு வேண்டுதல் முடிப்பார்கள், அந்நேரம் ஆலயத்துக்கான சிறப்பு பிரார்த்தனைகளை அவர்கள் செய்ய வேண்டும்.

இங்கே கவனிக்க வேண்டிய விசயம், பெரிய காணிக்கையோ, லட்சக்கணக்கான தட்சனையோ, பூஜையோ எதுவுமில்லை.

எல்லாமே இலவசம். பலன் கிடைத்து குழந்தை வந்தபின், நாகங்களுக்கு அவர்கள் ஏதும் செய்யலாம் ஆலயத்துக்கு உதவலாம்.

பன்னெடுங்காலமாக நடக்கும் ஆச்சரியம் இது. இதுவரை அங்கு சென்று உருளி கவிழ்த்து ஏமாந்தவர் யாருமில்லை.

எப்படி நாகர்கோவில் நாகராஜா கோவில் சுற்றுபுறங்களில் பாம்புகடித்து யாரும் இறக்கவில்லையோ, அப்படி இந்த நாக ஆலயமும் யாரையும் கைவிட்டதில்லை.

சாட்சிகள் கோடான கோடி.


நாக வழிபாட்டின் சக்தியினை இந்த ஆலயம் காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றது, என்றும் அது உண்டு.


குழந்தை வரம் அங்கு பிரதானம். மற்றபடி எல்லா நோய்களுக்கும் அங்கு தீர்வு உண்டு. இறைவன் அருள் உங்களோடு இருந்தால், சரியான நாக சிற்பத்தை அடையாளம் கண்டு உங்கள் நோய் எவ்வளவு கொடியதாயினும் நாகத்தின் அருளால் அங்கு குணமாக்க முடியும்.


அப்படியான சக்தி கொண்டது நாக வழிபாடு. அதன் பெரும் சாட்சி இந்த ஆலயம்.


நாகம் என்பது மானுடரோடு பின்னிப் பிணைந்த இறை சக்தி. இன்னொரு லோகத்தில் வாழும் மாபெரும் சக்தியின் மிக மேம்பட்ட சக்தியினை, தேவர்கள், கிங்கணர்கள், கந்தர்வர்கள் எனப் பலரை விட மகா சக்தியான நாக சக்தியினை நமக்கு இங்கு பெற்றுத் தருபவை நாகங்கள்.


அந்த மகா சக்தியின் க்ஷேத்திர பாலகர்களாக நம்முன் நிற்பவை நாகங்கள்.


நாகங்களின் அருளாலே கேரளம் செழித்தது, நாகங்களின் அருளாலே இன்றும் மன்னாரசாலையில் அனுதினமும் அதிசயம் நடக்கின்றது.


நாக வழிபாட்டின் சக்தி அசாத்தியமானது, அதனால்தான் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவழியில் நாக தரிசனம் பெற வேண்டும் என்ற ஏற்பாட்டை செய்தது இந்துமதம்.


சிவனின் கழுத்திலோ, விஷ்ணுவின் படுக்கையிலோ, அம்மனின் தலையிலோ, முருகனின் காலடியிலோ, விநாயகன் பூனூலாகவோ , சூரியனின் குதிரையின் கயிறாகவோ பாம்பினை வைத்தார்கள் இந்துக்கள்.


அது போல எல்லா ஆலயங்களிலும் வழிபாட்டிலும் தனி இடம் கொடுத்தார்கள்.


ஜோதிடத்திலும் இரு நாகங்களை வைத்து குறியீடாய் சொன்னார்கள்.


அந்த நாகங்களுக்கான நாள் இந்த நாக பஞ்சமி.


நாக சதுர்த்தி என அது சொல்லபட்டாலும், நாக பஞ்சமி என்றுதான் புராணங்கள் சொல்கின்றன. ஆவணி மாத வளர்பிறை பஞ்சமி நாகத்துக்கானது.


(நிலவை பிரதானமாக கொண்ட நாட்காட்டிப்படி ஆவணி வளர்பிறை பஞ்சமி நாகங்களுக்கானது, சூரிய அளவையினை கொண்ட நாள்காட்டிப்படி ஆடிமாத பஞ்சமி அமையும்.)


பாம்பு மானிடரைப் போல ஐந்து புலன்களின் ஆற்றல் மிக்கது, ஐம்புலன்களையும் மிக மிக விழிப்பான நிலையில் எப்போதும்  வைத்திருக்கும். அதன் விவேகத்துக்கும், நகர்வுக்கும், வேகத்துக்கும் அந்த விழிப்பு நிலைதான் காரணம்.


அப்படி மானிடரும் ஐம்புலன்களையும் எப்போதும் விழிப்பாக வைத்திருக்க வேண்டும் எனும் தத்துவப்படி, அந்த ஐந்தாம் நாள், பஞ்சமி நாள் நாகபஞ்சமி என்றானது.


பொதுவாக பஞ்சமி என்பது சூட்சும சக்திகளுக்கு தோதான நாள் எனும் வகையில் பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கும் நாளாக அமைந்தது.


அதனால் அந்நாளில் நாகத்துக்கான நாளாக அமைத்தார்கள், அன்று பூஜைகள் அவசியம், வழிபாடு அவசியம்.


நாக வழிபாட்டுக்கு பால் என்பதெல்லாம் அவை புற்றில் ஊற்ற வேண்டியவை, உயிருள்ள நாகத்துக்கு வழங்க வேண்டியவை.


நாக சிலை என்றால் பழமும் வெற்றிலை பாக்கு வழிபாடு போதும். சில அர்ச்சனைகள், அலங்காரங்களும் அவசியம்.


நாகத் துதிகளைச் சொல்லி பாடலாம், வேண்டலாம்.


ஓம் அனந்தம் வாஸுகிம் சேஷம் பத்மநாபம் ச கம்பலம் 

ஸங்கபாலம் தார்தராஷ்ட்ரம் தக்ஷகம் காளியம் ததா 

ஏதானி நவநாமானி நாகானாம் ச மகாத்மனாம் 

சாயங்காலே படேந்நித்யம் ப்ராத(ஹ்)கால விசேஷதஹ 

தஸ்மை விஷபயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீபவேத்!


ஓம் சர்பராஜாய வித்மஹே

நாகராஜாய தீமஹி

தன்னோ நந்தஹ் ப்ரசோதயாத்.


எனச் சொல்லி வழிபடலாம்.


நாக வழிபாடு என்பது மூட நம்பிக்கை அல்ல. ராகு கேது எனச் சொல்லி வைத்த வெறும் ஜாதகமும் அல்ல, அது பிரபஞ்ச சக்தியினை மானிடன் பெற்று நலமும் வளமும் ஆரோக்கியமும் பெற இந்து ஞானியர் ஏற்றிவைத்த ஜோதி.


ஞானமாக அவர்கள் போதித்த சூட்சும வழிமுறை.


அதனை இந்துக்கள் உலகுக்கு கொடுத்தார்கள்; அவர்களும் பின்பற்றுகின்றார்கள். இன்று இந்துக்களின் அந்த வழிபாடுதான் மருத்துவ சின்னமாக, ஐநாவின் சுகாதார நிறுவனச் சின்னமாக நிற்கின்றது.


அதை கொடுத்தவர்கள் இந்துக்கள்.


பாம்பு வடிவத்தின் மகத்துவம் அப்படியானது, அது ஞானமானது, புரிந்துகொள்ள முடியாத சூட்சும விஞ்ஞானம் அது. அந்த பாம்பு வடிவத்தை பார்த்து உடலில் வரும் மாறுதல், மானிட உடலிலும் அணுக்களிலும் ஏற்படும் மாறுதலை எல்லாம் விஞ்ஞானம் விளக்க, பலகாலம் ஆகும்.


பாம்பு என்பது உயிரை எடுக்க அல்ல, உயிரை உருவாக்கவும் உயிரின் வடிவாகவும், உடலை இயக்கும் வடிவாகவும், உயிரை வாழவைக்கும் வடிவாகவும் ஒரு அரூப சக்தியாய் உண்டு.


அதைத்தான் இந்துக்கள் கண்டறிந்து எல்லா மக்களுக்கும் சொன்னார்கள், அந்த பலனை உலகம் கண்டும் வருகின்றது.


இந்துவாக இருந்து இந்துக்கள் காட்டிய வழியில் முன்னோர்கள் சொன்னபடி நாகத்தை வணங்கி எல்லா நலமும் பலமும் அடைய வாழ்த்துக்கள்.


நாக பஞ்சமி அன்று இந்துக்கள் ஏரோட்ட மாட்டார்கள், காரணம் வயலில் பாம்புகள் அடிபட்டுவிடலாம் எனும் அச்சம் இருந்தது. 


அந்த அளவு நாகத்தை வணங்கி, காத்த சமூகம் இது.


இந்நாடும் சமூகமும் மதமும் கண்ட வீழ்ச்சிக்கு, ஆரோக்கியமும் ஞானமும் கொண்ட இந்துமக்கள் நோயாளிகளாக அறியாமையில் மூழ்கியவர்களாக மாறிப்போக, நாக  வழிபாடு குறைந்ததும் ஒரு காரணம்.


அதனை மீட்டெடுப்போம்; எல்லா நலமும் அடைவோம்.

உங்களுக்கு எந்த குறைபாடும் உடலில் இருக்கலாம், தீரா நோய் இருக்கலாம், குழந்தை பாக்கியம் தள்ளிப் போகலாம். அவ்வாறு வேதனை இருப்பின், அந்த மன்னாரசாலை நாகராஜா ஆலயம் சென்றுவாருங்கள்.

எவ்வளவு பெரிய நோயோ குறையோ உடலில் இருந்தாலும், அந்த நாகராஜாவின் அருளால் எல்லாம் குணமாகும் அது சத்தியம், பாம்புகள் காக்கும் சத்தியம் போல, உறுதியான சத்தியம்!!!





No comments:

Post a Comment