Pages

Wednesday, August 9, 2023

ஆடிக்கிருத்தகை 09/08/2023

 முருகன் பிறந்தது விசாக நக்ஷத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி வளர்த்தது ஆறு கார்த்திகைப் பெண்கள் கார்த்திகை நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தை ஆடிக் கிருத்திகையாக விரதமிருந்து வழிபடுகிறார்கள்.முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக்கிழமையும், நக்ஷத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.



பொதுவாக தென்னிந்திய பாரம்பரியத்தின் படி கிருத்திகை நட்சத்திரம் என்பதே முருகன் வழிபாட்டுக்கு உகந்த நட்சத்திரம் ஆகும். அதிலும் தெய்வ வழிபாடுகள் செய்ய உகந்த ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் சிறப்புக்குரியது. 'ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை’ என்பது தமிழ் ஆன்றோர் வாக்கு ஆகும். ஆடிக் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், கர்ம வினைகள் நீங்கும்; செவ்வாய் தோஷம் அகலும்; திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை ஸித்திக்கும் என்கின்றனர் அடியார்கள்.

ஆடிக் கிருத்திகை அன்று முருகன் கோவில்களில் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது வழக்கம்.. இந்த நாளில் முருக பெருமானை வழிபட்டால் நம்மை அச்சுறுத்தும் சக்திகளையும், எதிரிகளையும் அழிப்பார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

No comments:

Post a Comment