இன்று (22/6/2023) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் தேசிய ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி துணைத் தலைவர்கள் முருகன் மற்றும் விஜய் ஆகியோர் சந்தித்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை தெளிவாக. விரிவாக எடுத்துரைத்தனர். ஒவ்வொரு கோரிக்கையையும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேட்டு உரிய அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்க கூறினார். அமைச்சரிடம் ஆசிரியர் பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றுதல். மாணவர்களுக்கு நல்வழி காட்ட வழிகாட்டு நெறிமுறைகள், 2011 க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு TET தேர்வின்றி பதவி உயர்வு பெறுதல், சிறுபான்மை அற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு நிலுவையுடன் வழங்குதல், மாணவர் எண்ணிக்கை ஏற்ப 149 அரசாணையை ரத்து செய்து முறையான நியமனம் வழங்குதல் போன்ற பல்வேறு💐 கோரிக்கைகள்💐 மாண்புமிகு அமைச்சரால் ஏற்கப்பட்டது. *மு*.*கந்தசாமி* *மாநில* *பொதுச்* *செயலாளர்* *தேசிய* *ஆசிரியர்* *சங்கம்* **தமிழ்நாடு*
No comments:
Post a Comment