தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Thursday, November 17, 2022
Kallakuruchi District Association News
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தேசிய ஆசிரியர் சங்கம் கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள ஆ.புத்தந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை 14.11.2022 அன்று மாலை 4.10 மணியிலிருந்து 5.00 மணி வரை வினாடி வினா நடத்தி கொண்டாடியது. பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.P. திருமலை குமார் M.Sc.,B.Ed., அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் . கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு.பொ.இராமச்சந்திரன் M.A., M.Phil., B.Ed.,முதுகலை ஆசிரியர் ( வரலாறு) அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். சிறப்புரையில் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரைகளையும் வாழ்த்துகளையும் கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் திரு.சி.தர்மலிங்கம் M.Sc.,M.Ed.,அவர்கள் வினாடி வினாவினை நெறியளராக இருந்து சிறப்பாக நடத்தினார் . இந்த வினாடி வினாவில் மூன்று அணிகள் பங்கு கொண்டன. அணிக்கு நான்கு மாணவர்கள். இயற்பியல் சுற்று வேதியல் சுற்று உயிரியல் சுற்று வரலாறு சுற்று புவியியல் சுற்று என ஐந்து சுற்றுகள் ஒரு சுற்றுக்கு இரண்டு வினாக்கள் ஒரு வினாவிற்கு 10 மதிப்பெண்கள் . A அணி மாணவிகள் 1.ஜெ.ஸ்ரேயா 2.கி.தனுஷ்யா 3.வ.வாசுகி 4.க.ஷாலினி B அணி மாணவிகள் 1.செ.ஜனகப்பிரியா 2.ப.காவியா 3.ர.லாவண்யா 4.சி.ஷர்மிளா C அணி மாணவிகள் 1.பி.ஷாலினி 2.ஜ.காவியா 3.கு.கிருஷ்ண வேணி 4.மு.புவனேஸ்வரி வினாடி வினா முடிவில் C அணியைச் சார்ந்த மாணவிகள் 95 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தனர் . A அணியைச் சார்ந்த மாணவிகள் 70 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர் . B அணியைச் சார்ந்த மாணவிகள் 50 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
முதலிடம் பிடித்த C அணியைச் சார்ந்த நான்கு மாணவிகளுக்கும் தலா 300 ரூபாய் பரிசுத் தொகை ,வெற்றி கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் தலைமையாசிரியர் மற்றும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது .
இரண்டாமிடம் பிடித்த A அணியைச் சார்ந்த நான்கு மாணவிகளுக்கும் தலா 200 ரூபாய் பரிசுத் தொகை ,வெற்றி கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் தலைமையாசிரியர் மற்றும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது .
மூன்றாமிடம் பிடித்த B அணியைச் சார்ந்த நான்கு மாணவிகளுக்கும் தலா 100 ரூபாய் பரிசுத் தொகை ,வெற்றி கேடயம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் தலைமையாசிரியர் மற்றும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது .
கணித பட்டதாரி ஆசிரியர் பாரதிதாசன் அவர்கள் நன்றியுரை கூற குழந்தைகள் தின வினாடி வினா இனிதே நிறைவுற்றது .
No comments:
Post a Comment