Pages

Wednesday, June 8, 2022

தருமபுரியில் கோரிக்கை விளக்கவாயிற்கூட்டம்

 இன்று 08/06/2022 புதன்கிழமை தருமபுரி மாவட்டம் பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விடைத்தாள் பத்தாம் வகுப்பு திருத்தும் முகாமில்

மாநிலத்தலைவர் திரு.ம.கோ.திரிலோகச்சந்திரன்  அய்யா அவர்களின் ஆலோசனைப்படியும், மாநில பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு .மு.கந்தசாமி அய்யா அவர்களின் வழிகாட்டுதல்படியும் நமது தேசிய ஆசிரியர் சஙகத்தின் சார்பாக மாவட்டத்தலைவர் திரு. சி.துரைசாமி அவர்கள் நமது சங்கத்தின் செயல்பாடுகள், ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் சமுதாயத்திற்கும் இத்தேசத்திற்கும் நமது சங்கம் செய்துவரும் பணிகள் குறித்தும் ,


நமது  ஆசிரியர்களின் முதன்மையான கோரிக்கையான 

பழைய ஓய்வூதியதிட்டத்தை அமல்படுத்துவது, 


நிலுவையில் உள்ள பழைய  21 மாத அகவிலைப்படி , 


தற்போது வழங்காமல் உள்ள அகவிலைப்படி , 


நிறுத்தப்பட்டுள்ள சரண்டர் தொகைபெற வழிவகை செய்தல் ,

இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புச்சட்டம் வழங்குவதின்  அவசியம் உள்ளிட்ட கோரிக்கைகளை விவரித்து பேசினார். 

இக்கூட்டத்திற்கு மாவட்டத் துணைத்தலைவர் திரு சுரேஷ் அவர்கள்முன்னிலை வவகித்தார். 

மேலும் கல்வி மாவட்டப் பொறுப்பாளர்கள்,ஒன்றிய பொறுப்பாளர்கள்,சங்க உறுப்பினர்கள்,ஆசிரியப்பெருமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுப்பணி மற்றும்விடைத்தாள் திருத்தும் பணிக்கு வழங்கப்படும் மதிப்பூதியமானது மேல்நிலை வகுப்புகளுக்கு வழங்கப்படுவதைக்காட்டிலும் குறைவான  மதிப்பூதியம் வழங்குகின்றனர் என்பதை சுட்டிக்காட்டி சரிசமமாக மதிப்பூதியம் வழங்கவேண்டுமென கோரிக்கை வைத்தனர். 

கோரிக்கையை மாநில அளவில் எடுத்துச்செல்லப்பட்டு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டத்தலைவரால் வாக்குறுதியளிக்கப்பட்டது. 

 குறிப்பு:

கூட்டம் தொடங்குவதற்குமுன் நமது சங்கம்சார்ந்த  மற்றும் ஆசிரியர்களுக்காகவும் மாணவர்களுக்காகவும், இச்சமுதாயத்திற்காகவும் ,தேசத்திற்காகவும் முன்னெடுக்கும் செயல்விளக்க நோட்டீஸ் அனைவருக்கும் வழங்கப்பட்டது. 

இறுதியில் நன்றியுரையுடன் கூட்டம் சிறப்பாக நிறைவுபெற்றது. 

இப்படிக்கு

சி துரைசாமி

தலைவர்

தேசிய ஆசிரியர் சங்கம் 

தருமபுரி மாவட்டம் .


செய்தி வெளியீடு :

மாநில ஊடகப் பிரிவு,

தேசிய ஆசிரியர் சங்கம்,

தமிழ்நாடு.





No comments:

Post a Comment