Pages

Wednesday, March 23, 2022

மதுரை மாவட்ட செய்திகள்

22-03-2022 மாலை மதுரை கல்லூரி பள்ளியில் நமது தேசிய ஆசிரியர் சங்கத்தின் மதுரை மாவட்ட கூட்டம் நமது அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய மாநில பொதுசெயலாளர் திரு.மு. கந்தசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சரஸ்வதி துதியுடன் தொடங்கியது கூட்டம். மதுரை மாவட்ட தலைவர் திரு.கணேசன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் திரு.விஜய் அமைப்பின் சாரம்சம் பற்றி எடுத்துக் கூறினார்.விழாவின் முத்தாய் பாக நமது இயக்கத்தின் அடிப்படை நிலைப்பாடு, எதிர்கால செயல்பாடு, உறுபினர்களின் பணி பற்றி நமது மாநில பொதுசெயலாளர் விரிவாக  எடுத்து கூறினார்.மாவட்ட செயலாளர் திரு.பரமசிவம் நன்றியுரை ஆற்ற சாந்தி மந்திரத்துடன் விழா நிறைவுப்பெற்றது. கூட்டத்திற்கு 10 க்கு மேற்பட்ட உறுபினர்கள் கலந்துகொண்டனர்.






 

No comments:

Post a Comment