Pages

Saturday, February 12, 2022

திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று, நீட் தேர்வில் வெற்றி பெற்றும், 7.5% சிறப்பு இட ஒதுக்கீட்டின்மூலம் தேர்வான 22 மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வினித் I.A.S., பாராட்டி அவர்களுக்கு ஸ்டெதஸ்கோப்புகளை பரிசாக வழங்கினார்.

நீட் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர், நீட் தேர்வில் வெற்றி பெற்றும், 7.5% சிறப்பு இட ஒதுக்கீட்டின்மூலம் தேர்வு பெற்றும், மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்று பல்வேறு கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளனர். இதனிடையே அரசு பள்ளியில் பயின்று, மருத்துவராக பயில இருக்கும் 22 அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் திரு.வினித் I.A.S., நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்வேன் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்காக வங்கி மூலம் உடனடியாக கல்விக்கடன் ஏற்பாடு செய்து தரப்படும் எனவும் மாணவர்களிடையே உறுதி அளித்தார். தொடர்ந்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் உள்ள 22 மாணவர்களுக்கும் ஸ்டெதஸ்கோப்புகளை பரிசாக வழங்கினார்.

மாணாக்கர்கள் படித்த பள்ளியின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் 11 பேருக்கும் ஆட்சியர், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் உள்ளிட்டோர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.




1 comment:

  1. அருமையான செயல்.
    அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்...

    ReplyDelete