Pages

Tuesday, January 18, 2022

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

 இன்று  (18/01/2022) தேசிய ஆசிரியர் சங்கம் -தமிழ்நாடு  செங்கல்பட்டு மாவட்டத்தின்  சார்பாக கடமை உணர்வு தினம் நிகழ்ச்சி zoom meet வாயிலாக சிறப்பாக நடைபெற்றது.ஆசிரியர்கள் பலரும் கலந்துகொள்ள,

நாட்றம்பள்ளி இராமகிருஷ்ண மடத்தின் சுவாமிஜி சம்ஹிதானந்தா அவர்கள் கலந்துகொண்டு ஆசிரியர்களின் கடமை குறித்து மிகமிக தெளிவான பார்வையை முன்வைத்தார்கள்.அஃது அனைவருக்கும் மிக்க எழுச்சியுணர்வையும் உத்வேகத்தையும் அளித்தது.

         தொடர்ந்து நம் சங்கத்தின் மாநில தலைவர் திரு திரிலோகசந்திரன் ஐயா அவர்கள் நம் சங்கம் குறித்த தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

       மேலும் நம் சங்கத்தின் மாநில செயலாளர் திரு கந்தசாமி ஐயா,மாநில பொருளாளர் திரு திருஞானகுகன் ஐயா அவர்கள் கலந்துகொண்டனர்.  தொடர்ந்து நம் மாவட்டத்தை சேர்ந்த  உணர்வுமிக்க ஆசிரியர்கள்

நம் மாவட்டத்தில் சங்கத்தின் அடுத்தடுத்த வளர்ச்சி குறித்த ஆலோசனைகளையும் திட்டங்களையும் முன்வைத்தனர்.

ஆசிரியர்களின் அடுத்த கூட்டம் குறித்த நாள்,நேரம்,இடம் முடிவுசெய்யப்பட்டது.நிகழ்ச்சி இறைவணக்கத்துடன் ஆரம்பித்து,தேசபக்தி பாடலுடன் நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment