CLICK HERE TO ATTEND QUIZ
இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக சனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் நாளாக (National Voters' Day) கடைபிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை மக்கள் தங்கள் கடமையாகக் கருத வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது இந் நாளின் நோக்கமாகும்.
18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர். தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளைக் களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். வாக்காளர் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை (EPIC) ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது.
1950ஆம் ஆண்டு சனவரி 25 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக 2011-இலிருந்து இது பின்பற்றப்படுகிறது.
National Voters Day 2022 Theme: Electoral Literacy for Stronger Democracy
No comments:
Post a Comment