Pages

Monday, January 31, 2022

மாநில அளவில் கடமை உணர்வு தினம் - 2022

 30.01.222 ஞாயிறு பிற்பகல் 3.45 மணிக்கு இணையம் வழியாக கடமையுணர்வு தினம் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் இனிதே கொண்டாடப்பட்டது. மாநில மகளிரணி செயலாளர் திருமதி. சாருமதி தேவி அவர்கள் சரஸ்வதி வந்தனத்துடன் நிகழ்ச்சியை துவக்கினார். மாநில துணை தலைவர் திரு. முருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் திரு. மு.  கந்தசாமி தேசிய ஆசிரியர் சங்கத்தின் சாதனைகளைப் பற்றி எடுத்துரைத்தார். சுவாமி சிவயோகானந்தா சின்மயா மிஷன் மதுரை அவர்கள் சிறப்புரை வழங்கினார். அவர் தம் உரையில் கல்வியின் உண்மையான பயன்> கற்றுக்கொடுக்கும் ஆசிரியருக்கும் - கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கும் இடையே உண்மை இருக்கவேண்டும். கலாச்சாரம்> பண்பாடு> தேசத்திற்காக உழைப்பது      நமது கடமை. கடமை என்பது உண்மை உணர்வுடன் எதிர்பார்பற்ற அதிகமான பொறுப்புடன் செயல்படுவது என மிகத் தெளிவாக மகாபாரதத்தை மேற்கோள்காட்டி எடுத்துரைத்துரைத்தார்.

மாநிலத் தலைவர் திரு.திரிலோக சந்திரன் அவர்கள் தேசிய ஆசிரியர் சங்கம் சிறப்புடன் செயலாற்றும் முறை குறித்து வழிகாட்டினார். மாநிலப் பொதுச் செயலாளர் வருங்கால திட்டப்பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.மாநிலப்பொருளாளர் திரு.திருஞானகுகன் அவர்கள்சங்கத்தின் பணிகள் செயலாற்றும் முறைகள் குறித்து விளக்கினார்.  மாநில இணைச் செயலாளர் திரு.ராகவன் அவர்கள் நன்றி உரை நவில நாட்டு நலவாழ்த்துடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சியை மாநிலத் துணைத் தலைவர் திரு. பா. விஜய் தொகுத்து வழங்கினார்.










No comments:

Post a Comment