Pages

Sunday, November 21, 2021

தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

 இன்று 21/11/2021 தஞ்சாவூரில் தேசிய ஆசிரியர் சங்க மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் இனிதே நடைப்பெற்றது.

        மாவட்டதலைவர் திரு. இரா.பார்த்திபன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயளாளர் திரு சு.கனகசுந்தராஜன்  முன்னிலை வகித்தார். கூட்டதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இணைச்செயலாளர் திரு.சி.இராகவன் மற்றும் கெளரவ ஆலோசகர் திரு.ராம.ரத்தினம் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

மாநில ஊடகப்பிரிவைச் சார்ந்த ஆசிரியர் திரு. வா.ஸ்ரீராம்  அவர்கள் கலந்துகொண்டு ஆசிரியர் நலன்,பணிமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள்,பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு,ஈட்டிய விடுப்பு சரண்டருக்கான அனுமதி போன்ற பல்வேறு ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுருத்தி விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


தீர்மானம் :1


 ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் கலந்தாய்வு உடனடியாக நடத்த இச்சங்கம் அரசைக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் :2

                   தற்போதிய அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய பென்சன் திட்டம் உடனடியாக காலதாமதமின்றி செயல்படுத்தவேண்டும்.


தீர்மானம் :3

         மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உள்ளிட்ட அனைத்துவிதமான படிகளும் தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு  காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்.


தீர்மானம் :4

முதுகலையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் அதிகளவு எண்ணிக்கையிலான ஆசிரியர்களை கலந்துகொள்ளச்செய்து பதவி உயர்வு பணியிடங்கள்(பதவி உயர்வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்) அனைத்தும் முழுமையாக நிரப்ப ஒவ்வொரு வருடமும் விடுபடாமல் கலந்தாய்வு நடத்தவேண்டும்.


தீர்மானம் : 5

பட்டதாரி ஆசிரியர் நிலையில் உள்ள முதன்மைப்பாடத்தை (subject)தவிர்த்து மற்றப்பாடத்தில் முதுகலையாசிரியர் பாடமாக உள்ளவற்றிற்கு பதவி உயர்வுக்கு Cross Major அனுமதிக்கவேண்டும்.
 
தீர்மானம் :6

தற்போது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ள தமிழக அரசின்  இல்லம் தேடிக்கல்வி திட்டம் இச்சங்கத்தால் வரவேற்கப்படுகிறது. மேலும் இத்திட்டம் செயல்படுத்தும்போது மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது. 

தீர்மானம் : 7

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமூக அறிவியல் பாடத்திற்கு வாரம் 7 பாடவேளை ஓதுக்க வேண்டும்.

போன்ற ஆசிரியர்,மாணவர், சமுதாய நலன் சார்ந்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இறுதியில் மாவட்ட மாவட்ட மகளிரணி தலைவி முனைவர்  B S ஜெயலலிதா அவர்களின் நன்றி உரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

நிகழ்ச்சி ஓருங்கிணைப்பு  : விராலிமலை ஆர்.ராஜகோபாலன்








No comments:

Post a Comment