Pages

Tuesday, July 6, 2021

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையருடன் தேசிய ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் சந்திப்பு

 05.07. 2021 திங்கட்கிழமை

 நம் தேசிய ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. ம.கோ.திரிலோகசந்திரன்  அவர்கள் தலைமையில் மாநில துணைத்தலைவர் திரு.  விஜய், மாநில இணைச் செயலாளர் திரு. ராகவன் மாநில மகளிர் அணிச் செயலாளர்  திருமதி. சாருமதி தேவி மாநில பொறுப்பாளர் திருமதி. பூங்குழலி, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் திரு. நீலமேகம் விழுப்புரம் மாவட்டத் தலைவர் திரு. இளங்கோ ஆகியோர் நம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய ஐயா திரு.  அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து நம் கோரிக்கைகளை நிறைவேற்ற கேட்டுக்கொள்ளப்பட்டது.  அதை கனிவுடன் ஏற்று பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

                                                 

மேலும்,

பிற்படுத்தப்பட்டோர் ,மி.பி & சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலானர் 

திரு.,A. கார்த்திக் மற்றும்

 பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் திருமதி.காகர்லா உஷா ஆகியோரைச் சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

நமது பள்ளிக்கல்வி ஆணையாளர் அவர்களை சந்தித்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களின் கோரிக்கைகள் அளிக்கப்பட்டது. நமது சங்க நடவடிக்கைகளை ஆணையாளர் அவர்கள் மிகவும் பாராட்டினார்.

 இந்நிகழ்வுகள் நமது சங்கம் மேலும் பல சிறப்பான செயல்களை செய்வதற்கு ஊக்குவிப்பதாக அமைவது மகிழ்ச்சி அளிக்கிறது.




வலியுறுத்தப்பட்ட முக்கிய கோரிக்கைகள் :


1.பள்ளி திறக்கப்படும் முன்பே பணி மாறுதல்,பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திட வேண்டுதல்


2.ஊக்க ஊதிய உயர்வு தடை அரசாணை ரத்து செய்தல்


3.வகுப்புக்கு ,பாடத்திற்கு ஒரு ஆசிரியர்  ஒரு ஆசிரியருக்கு 28 பாடவேளை என்ற அடிப்படையில் கூடுதல் ஆசிரியர் நியமனம்


4.உயர்கல்வி முன் அனுமதி பெறாமல் படித்தவர்களுக்கு  சிறப்பு முன் அனுமதி வழங்குதல்


5.தகுதி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்துதல் 


6.பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்தல்

 7. மற்றும் பல......

கோரிக்கைகளின் முழு விவரம்  - CLICK HERE


பத்திரிக்கை செய்தி - CLICK HERE

தேசிய ஆசிரியர் சங்கத்தில் இணைய - CLICK HERE


3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தேசியமும் தெய்வீகமும் பள்ளி பாடத்தோடு கற்பிக்கின்ற ஆசிரிய பெருமக்களுக்கு இவ்வலைதளச்சேவை பயன்படும். வாழ்த்துக்கள்

    ReplyDelete