Pages

Saturday, July 24, 2021

16.07.2021 அன்று பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் நடைபெற்ற காணொலிக் கூட்டத்தில் வழங்கப்பட்ட 21 அறிவுரைகள்

 

கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

 

16.07.2021 -இல் நடைபெற்ற காணொலி கூட்டத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் கீழ்க்காணும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

CLICK HERE TO DOWNLOAD CEO PROCEEDINGS

 

1 அனைத்து அரசுப்பள்ளிகளிலும் Hi - Tech Lab முழுமையாக செயல்படும் நிலையில் இருத்தல் வேண்டும்.

 

2. Hi - Tech Lab மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

 

3. கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு கால அட்டவணை பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும்.

 

4. வாராந்திர கல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்பு கால அட்டவணையை மாணவர் ! பெற்றோருக்கு அனுப்புதல் வேண்டும்.

 

5. கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் மாணவர்களால் பார்க்கப்படுவதை ஆசிரியர்கள் மூலம் கண்காணித்தல் வேண்டும்.

 

6. மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சியை பார்த்து அதில் ஏற்படக்கூடிய சந்தேகங்களை ஆசிரியர்கள் தெளிவுப்படுத்துதல் வேண்டும்.

 

7 ஒவ்வொரு ஆசிரியரும் இதுசார்ந்த விவரங்களை எழுதி தனிப்பதிவேடு பராமரித்தல் வேண்டும் . இப்பதிவேட்டினை தலைமையாசிரியர் ஆய்வு செய்தல் வேண்டும்.

 

8. கல்வித் தொலைக்காட்சியை காணத்தவறிய மாணவர்கள் அந்த பாடங்களை You Tube மூலம் காணலாம் என்ற விவரத்தினை தெரியப்படுத்துதல் வேண்டும்.

 

9. அனைத்து வகைப் பள்ளிகளிலும் EMIS பதிவுகள் முழுமையாக மேற்கொள்ளுதல் வேண்டும்.

 

10 , குறிப்பாக புதியதாக சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் , மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் , மேல் வகுப்பிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களின் விவரங்களையும் EMIS -ல் பதியப்படுதல் வேண்டும்.

 

11 மாணவர்களின் வீட்டில் உள்ள தொலைக்காட்சி , மடிக்கணினி , செல்போன் போன்ற விவரங்களை EMIS -ல் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

 

12. கடந்த ஆண்டினைவிட இந்த ஆண்டில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

 

13. அனைத்து பள்ளிகளும் PFMS Portal- ல் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.

 

14 , பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கோவிட் - 19 தடுப்பூசி ( முதல் மற்றும் இரண்டாவது Dase ) போடப்பட்டிருக்க வேண்டும்.

 

15. பள்ளிகளில் விலையில்லா நலத்திட்டங்கள் பெறப்படுவதை பதிவு செய்வதற்கு பதிவேடு பராமரிக்க வேண்டும் . அதனை அவ்வப்போது Update செய்தல் வேண்டும்.

 

16. E- Box மூலம் நீட் பயிற்சி பெறும் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் பயிற்சி மேற்கொள்ளப்படுவதை பள்ளிகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள பொறுப்பாசிரியர்கள் தினமும் கண்காணித்தல் வேண்டும்.

 

17 , மாணவர்கள் பயிற்சி பெறுவதை கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் வருவாய் மாவட்ட பொறுப்பாளர்கள் தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும்.

 

18. நீட் பயிற்சி பெறும் மாணவர்கள் அனைவரும் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தலைமையாசிரியர்கள் அறிவுரைகள் வழங்குதல் வேண்டும்.

 

19. நீட் தேர்விற்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த இயலாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் / புரவலர்கள் | உள்ளூர் பிரமுகர்கள் / விருப்பமுள்ள ஆசிரியர்கள் போன்றவர்கள் மூலம் விண்ணப்பக்கட்டணம் செலுத்த ஏற்பாடு செய்தல் வேண்டும்.

 

20 , மேற்காணும் எந்த முறைகளிலும் விண்ணப்பக்கட்டணம் செலுத்த இயலாத , பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் பெயர் பட்டியல் தயார் செய்து சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 28.07.2021 - க்குள் ஒப்படைத்தல் வேண்டும்.

 

21. இக்கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் முதல் அலகுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . கடந்த கல்வியாண்டில் அலகுத்தேர்வுகள் நடைபெற்ற அதே நடைமுறை பின்பற்றப்பட உள்ளது . மாணவர்களை அலகுத் தேர்விற்கு முழுமையாக தயார்படுத்தும்படி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் அறிவுறுத்துதல் வேண்டும்.

No comments:

Post a Comment